G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காண தொடர் முயற்சிகளில் துரை வைகோ எம்.பி

இன்று மீண்டும் ஒரு முறை மாண்புமிகு ரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து திருச்சி மக்களின் நீண்ட கால கோரிக்கையான G Corner போக்குவரத்து ஒழுங்கின்மைக்கு தீர்வு காணும் பொருட்டு தற்போது உள்ள நிலையை துரை வைகோ எம்.பி விளக்கினார்.
அதுகுறித்து துரை வைகோ விடம் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளிக்கையில் இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்குவதாக உறுதியளித்தார்.

இதன் பின்னர் மீண்டும் ஒரு முறை மாண்புமிகு சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் திரு. ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களையும் புது தில்லியிலுள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்து G Cornerல் உயர்மட்ட சுழல் பாலம் (Elevated Rotary) குறித்தான நடவடிக்கைகள் குறித்து பேசினார் துரை வைகோ எம்.பி. அப்போது அவர் பதிலளிக்கையில், இது குறித்து மாண்புமிகு ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களும் அவருடன் கலந்துரையாடியதைக் குறிப்பிட்டு இது குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என்பதை உறுதி செய்தார்.

மேலும், சஞ்சீவி நகர் மற்றும் Y Junction ஆகிய பகுதிகளில் சுரங்க பாதை ( Vehicular Underpass) அமைப்பது ஏற்கனவே வரைபடம் மற்றும் திட்ட செலவு இறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் டெண்டர் நடைமுறைகளில் முடிவு எட்டபடும் என்பதையும் உறுதி செய்தார்.

G Corner மற்றும் சஞ்சீவி நகர், Y Junction குறித்தான துரை வைகோ வின் கடிதங்களுக்கு எழுதுபூர்வமாக பதிலும் கொடுத்துள்ளார்.

திருச்சி மக்களின் 16 ஆண்டு கால கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும் என்பதில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

தனது திருச்சி மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடுவேன் என துரை வைகோ எம்.பி உறுதியளித்தார்.

#MDMK #Vaiko #trichymp #DuraiVaiko #aswinivaishnav #GCorner

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *