மனிதம் எனும் புனிதம் போற்றும் துரை வைகோ எம்.பி

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த திரு. தேவராஜ் வேலு அவர்கள் அங்கே திடீரென மரணமடைந்தார். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் துரை வைகோ; அதன் தொடர்ச்சியாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 அன்று தேவையான NOC உள்ளிட்ட அனைத்து அனுமதிகளையும் வழங்கி, தொடர்புடைய நடைமுறைகளை மேற்கொண்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, இன்று அதிகாலை திரு. தேவராஜ் வேலு அவர்களின் உடல் சென்னை விமானநிலையம் வந்தடைந்தது. அதன் பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, இறுதி சடங்குகள் முறையாக நடைபெற்றன.

இந்த துயரமான நிகழ்வில் புதுக்கோட்டை மதிமுக மாவட்ட செயலாளர் திரு. S.K. கலியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர் திரு. V.K. மதியழகன், திரு. ராஜ்குமார், திரு. முத்துவேல், திரு. பாண்டி, திரு. ஆறுமுகம் மற்றும் ஏராளமான மதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு, மறைந்த திரு. தேவராஜ் வேலு அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்த வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் எனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்வதாக துரை வைகோ தெரிவித்தார்..மேலும்…..

மறைந்த திரு. தேவராஜ் வேலு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

    இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *