நான் இந்த மண்ணின் மைந்தர். என்னை வெற்றி பெறச் செய்தால் இந்த தொகுதி மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருந்து பணியாற்றுவேன்- நந்தகுமார்

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில்
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் செ.நந்தகுமார் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் இன்று வேட்பாளர் நந்தகுமார் தலைமையில் கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் இரு சக்கர வாகனம், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருச்சி மாநகர் முழுவதும் பேரணியாக வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை, ஒத்தக்கடை பகுதியில் உள்ள பெரும்பிடுகு முத்தரையர் சிலை, சிந்தாமணி பகுதியில் உள்ள அண்ணா சிலை, எம்ஜிஆர் சிலை உள்ளிட்ட தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தார்.

திருச்சி பாலக்கரை மதுரை ரோட்டில் உள்ள மாநகராட்சி அரியமங்கலம் மண்டல அலுவலகத்தில் நந்தகுமார் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்பு முடிவை தாக்கல் செய்தார். அப்போது கட்சி மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதன் பின்னர் நந்தகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் சசிகலா மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஆகி யோர் நல்லாசியுடன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளேன். திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவதற்காக தற்போது வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன்.

என்னை சசிகலா வேட் பாளராக அறிவித்துள்ளார். கடந்த ஐந் தாண்டு கால தி.மு.க. ஆட்சியில் திருச்சி கிழக்கு தொகுதியில் எந்த ஒரு திட்டமும் செயல் படுத்தப் படவில்லை. அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப் படவில்லை.

பர்மா பஜார் வியாபாரிகள் இன்றைக்கு வாழ்வாதாரம் இழந்து நடு ரோட்டுக்கு வந்திருக்கிறார்கள்.

அதே போன்று நடிகர் விஜய் சினிமா செல்வாக்கை வைத்து ஜெயித்து விடலாம் என நினைத்து இங்கு போட்டியிடுகிறார். இவர்கள் இரண்டு பேருமே வெளியூரை சேர்ந்தவர்கள். நான் இந்த மண்ணின் மைந்தர். என்னை வெற்றி பெறச் செய்தால் இந்த தொகுதி மக்களுக்கு என்றும் விசுவாசமாக இருந்து பணியாற்றுவேன்.

தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேர்தல் களத்துக்கு வந்துள்ளேன். சசிகலா மற்றும் டாக்டர் ராமதாஸ் நல்லாசியுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

என்னுடைய வெற்றி மக்களின் வெற்றி.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக சென்னையி லிருந்து திருச்சி வந்த வேட்பாளர் நந்தகுமாருக்கு கே.கே.நகரில் பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் பட்டாசு வெடித்து மேளதா ளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும் நிர்வாகிகள் மாலை அணிவித்தும், பொன்னாடை அணிவித்தும் வரவேற்றனர். அதன் பின்னர் கே.கே.நகர் இந்தியன் வங்கி காலனியில் உள்ள தனது இல்லத்தில் நந்தகுமார் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோர் உருவப்படங்க ளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் கட்சியினரின் வரவேற்பை ஏற்றுக்கொண்டார்

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *