திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு… பல ஆண்டுகளாகமூடிக் கிடக்கும் கீழவாசல் கோபுரத்தால்ஸ்ரீரங்கத்தில் வாக்கு பதிவு குறைய வாய்ப்பு…நடவடிக்கை எடுப்பரா ? திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரி ….ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் கோரிக்கை..

வருகின்ற 2026 ஏப்ரல் 23 அன்று தமிழக சட்டசபைக்கு வாக்குபதிவு நடைபெறுகிறது. இது சமயம் திருச்சி ஸ்ரீரங்கம் -139 – சட்டமன்ற தொகுதியில் வரும் ஸ்ரீரங்கம் மாநகராட்சி 2, 3 வார்டுகளில் அடங்கிய முக்கிய பாதையாக விளங்கும் கீழவாசல் கோபுர வழி இந்த கோபுர பராமரிப்புக்காக சுமார் 3வருடங்களாக பூட்டிக்கிடக்கிறது . இந்த முக்கிய பாதை வழியாக இந்த பகுதி மக்கள் குறிப்பாக கீழ உத்திரை சித்திரை – கீழ அடையவளஞ்சான் – கீழவாசல் சுற்றியுள்ள பகுதி மக்கள் தங்களது வாக்குகளை செலுத்த சுமார் 15-க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் Dr ராஜன் ஸ்கூல் – கிழக்கு ரெங்கா- பெண்கள் – ஆண்கள் மேல் நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கீழவாசல் கோபுர முக்கிய பாதை அடைக்கப்பட்டுள்ளதால் இங்குள்ள மக்கள் Ikm சுற்றி வந்து வாக்களிக்கும் நிலை ஏற்படுகிறது . இதனை சுற்றி வர பயந்து பலர் வாக்களிக்கவே வர முயற்சி செய்யாமல் வீட்டிலியே முடங்கி விடுவர் . இதனால் இங்கு வாக்கு பதிவு சதவிதம் குறைய வாய்ப்பு உள்ளது .

எனவே 2026ஸ்ரீரங்கம் தொகுதி மற்றும் திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் திருச்சி மாவட்ட கலெக்டர் உடனடியாக இதில் தலையிட்டு ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகத்திடம் பேசி- ஏப்ரல் 23 வாக்குபதிவுக்குள் இந்த முக்கிய கீழவாசல் கோபுர பாதையை திறந்து விடும் படி ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் இதன் மூலம் கோரிக்கை வைக்கிறது .


குறிப்பாக வரும் 2026 ஶ்ரீரங்கம்-139 சட்டமன்ற தேர்தலுக்கு இங்கு போட்டியிடும் அனைத்து கட்சி வேட்பாளர்களும் கட்சி வேறுபாடு இல்லாமல் வரும் தேர்தலில் இங்கு 100% வாக்கு சதவீதம் பெற இந்த 15க்கும் மேற்பட்ட வாக்குசாவடிகளுக்கு செல்வதற்கு முக்கிய வழியாக உள்ள பூட்டிக் கிடக்கும் கீழவாசல் கோபுர பாதையை உடனடியாக திறக்க தமிழக அரசுக்குக்கும் – HRCE-க்கும் திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருக்கும் கோரிக்கை வைக்க வேண்டும் இதன் மூலம் வேண்டுகிறோம்.


என்றும் ஸ்ரீரங்கம் மக்கள் சேவையில்..
ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்கம் .
தலைவர் முனைவர் S.N. மோகன்ராம்-9952875881.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திருச்சியில் கிரடாய் பேர்புரோ கண்காட்சி; அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார் – 48 அரங்குகளில் வீடுகள், மனைகள் காட்சிப்படுத்தல்!

    திருச்சியில் கிரடாய் சார்பில் அடுக்குமாடி குடியிருப்புகள், தனி வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் தொடர்பான பேர்புரோ – 2026 விற்பனை கண்காட்சி இன்று தொடங்கியது. திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இந்தக் கண்காட்சி, நாளை மறுநாள் வரை தொடர்ந்து 3…

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *