திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன் – துரை வைகோMP

திருச்சி – திருப்பதி இடையே இரயில் இயக்கப்படும் என்று ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்கிறேன்.

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான திருச்சி – திருப்பதி இடையேயான பகல் நேர இரயில் சேவைக்கு ஒன்றிய இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்படி, குண்டூர் – திருப்பதி இடையே இயக்கப்படும் பகல் நேர இரயில் சேவை திருச்சிராப்பள்ளி வரை நீட்டிக்கப்பட்டு, திருச்சி – குண்டூர் – திருப்பதி வழித்தடத்தில் இயக்கப்படும்.

இந்தக் கோரிக்கையை முன்வைத்து மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களை நேரில் சந்தித்த வலியுறுத்தினேன்.

மேலும், கடிதம் வாயிலாகவும் தொடர்ந்து பலமுறை வலியுறுத்தியிருந்தேன். அதன் விவரம் பின்வருமாறு:

  • 27.03.2025 அன்று தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு கடிதம் எழுதினேன்.
  • 10.12.2025 அன்று மாண்புமிகு ஒன்றிய இரயில்வே துறை அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.
  • 04.02.2026 அன்று அவருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பினேன்.
  • 07.03.2026 அன்று திருச்சி மண்டல இரயில்வே மேலாளருக்கு கடிதம் எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

இந்த நீட்டிக்கப்பட்ட புதிய இரயில் சேவை திருச்சி உள்ளிட்ட மத்திய மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக அமையும். திருப்பதி செல்லும் பக்தர்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.

இதற்காக வேண்டி, மாண்புமிகு ஒன்றிய இரயில்வே அமைச்சர் திரு. அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக இரயில்வே மற்றும் திருச்சி மண்டல இரயில்வே அதிகாரிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்
துரை வைகோ
நாடாளுமன்ற உறுப்பினர் (திருச்சி)
முதன்மைச் செயலாளர்
மறுமலர்ச்சி திமுக
09.05.2026

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

லஞ்ச ரேட் லிஸ்ட்- திருப்பராய்த்துறை மின்சார வாரிய அலுவலகம்.தரிகெட்டு ஓடும் புரோக்கர்கள் – கதறவிடும் கார்த்திகேயன் -AE – ஆதாரங்களைத்தருகிறோம் ஆக்‌ஷனில் இறங்குவாரா அமைச்சர் நிர்மல்குமார்?

தமிழக முதல்வராக திரு ஜோசப் விஜய் பதவி ஏற்றவுடன் லஞ்சம் வாங்கும் ஊழல் அதிகாரிகளுக்கு வயிற்றில் புளியை கரைக்க ஆரம்பித்து விட்டது. இதனால் லஞ்சம் முற்றிலும் மறையத் தொடங்கியுள்ளது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் திருப்பராய்த்துறையில் தற்காலிக உதவி மின் பொறியாளராக…

துரை வைகோ எம்.பி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

இன்று (22.07.2026) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளோடு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியில் உள்ள அலுவலகத்தில் துரை வைகோ எம்.பி சந்தித்தார். முதலாவதாக, திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகம் (Dry Port…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *