யேமன் நாட்டில் தமிழர் மரணம் – துரை வைகோ எம்.பி முயற்சியால் உடல் தமிழகம் கொண்டுவரப்படுகிறது

யேமன் நாட்டு நிறுவன எண்ணெய் கப்பலில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் 08.03.2026 அன்று, கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் கடுமையான பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக யேமனின் ஹொதெய்தா நகரிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்களின் தீவிர முயற்சிகளுக்கும் பிறகு அவர் 03.04.2026 அன்று உயிரிழந்தார்.

அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக 12.04.2026 அன்று ரியாத்திலுள்ள இந்திய தூதரகம் தடையில்லா சான்று (NOC) வழங்கியுள்ளது. பின்னர், அவரது உடல் விமான மற்றும் போக்குவரத்து வசதிகளின் பற்றாக்குறை மற்றும் சில நிர்வாக சிக்கல்களால் தாய்நாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கை தாமதமாகியுள்ளது.

இந்நிலையில், அவரது உடல் இந்தியா வந்து சேரும் தேதி குறித்து இதுவரை எந்த உறுதியான தகவலும் இல்லை என துரை வைகோ விடம் தெரிவித்து, மிகுந்த மனவேதனை மற்றும் துயரத்தில் அவரது உடலை கொண்டுவர முறையிட்டனர்.

இந்த தகவலை மாண்புமிகு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கு 04.05.2026 அன்று கடிதம் எழுதி, சம்பந்தப்பட்ட இந்திய தூதரகம் மற்றும் அதிகாரிகளுடன் உடனடி ஒருங்கிணைப்பை மேற்கொண்டு, மறைந்த திரு. ஃபெர்னாண்டோ ரெமிசியன் சுரேஷ் அவர்களின் உடலை மிக விரைவாக இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார் துரை வைகோ எம்.பி.

அதன் அடிப்படையில் இன்று அவரது உடல் யேமனிலிருந்து விமானம் மூலம் புறப்பட்டுவிட்டதாக தகவல் தரப்பட்டது. . இன்றே கேரளம் வழியாக அவரது சொந்த ஊரான தூத்துக்குடிக்கு அவரது உடல் அனுப்படவுள்ளதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உறுதிப்படுத்திக்கொண்டார் துரை வைகோ எம்.பி.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    பல்வேறு கோரிக்கைகளோடு இரயில்வே பொது மேலாளரை சந்தித்த துரை வைகோ எம்.பி

    இன்று (21.08.2026) மாலை 5.30 மணி அளவில் திருச்சியில் உள்ள ரயில்வே கோட்ட மேலாளர் (DRM – Trichy) அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து, திருச்சி மக்களின் சார்பில் பல்வேறு முக்கிய ரயில்வே கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார் துரை வைகோ…

    துரை வைகோ எம்.பி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு

    இன்று (22.07.2026) திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளோடு மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை புது தில்லியில் உள்ள அலுவலகத்தில் துரை வைகோ எம்.பி சந்தித்தார். முதலாவதாக, திருச்சிராப்பள்ளியில் உலர் துறைமுகம் (Dry Port…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *