
திருச்சியில் மீண்டும் நகர பேருந்து கால அட்டவணை
பேருந்து கால அட்டவணை தேவையா & கால அட்டவணை வைக்க வைப்பது என்ன ஒரு சாதனையா என்பது நம்மில் பலரின் கேள்வி. இது ஒரு மிகப்பெரியர் மாற்றத்திற்கான தொடக்கம் என்பது சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கும், நகரப் பேருந்து பயனீட்டாளர்களுக்கும் தெரிந்த விஷயம்.
நமது நோக்கம் அனைத்து வழித்தடங்களிலும் பேருந்து கால அட்டவணை வைக்க வேண்டும் என்பதுதான்
It goes without saying that an informed citizen is better equipped to keep necessary vigil on the instruments of governance and make the government more accountable to the governed
முதல்வரின் முகவரி துறை மிகவும் சிறப்பாக செயல்படுகிறது அது இல்லை என்றால் இந்த நகரப் பேருந்து கால அட்டவணை கிடைப்பது & வைப்பது என்பது குதிரை கொம்பு தான்
நம்மில் பலர் பொதுவாக தனியாக சென்றால் 2 சக்கர வாகனத்தில் குடும்பமாக செல்வதென்றால் காரில் சென்று விடுகிறோம். ஆனால் இன்றும் நகர பேருந்து என்பது நம்மில் பலருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்று இரவு நேரங்களில், அதிகாலை வேளையில் ஒரு முறை பேருந்து நிலையத்தில் வலம் வந்தால் தெரியும் அது எவ்வளவு அவசியம் என்று.
90ஸ்ல் சத்திரம் பேருந்து நிலையத்தில் அனைத்து பேருந்துகளும் செல்லும் இடங்களில் குறிப்பாக அந்தந்த வழித்தடங்களில் இது போன்ற பேருந்து கால அட்டவணை இருந்தது நாளடைவில் அப்படியே காணாமல் போய்விட்டது
அது மட்டும் இல்லாமல் தீரன் சின்னமலை போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஒலிபெருக்கியில் மைக் மூலம் பேருந்து செல்லும் தகவலை தெரிவிப்பார்கள். தற்போது ஒலிபெருக்கி தகவல் உண்டு, அது பயணிகள் ஜாக்கிரதை என்ற காவல் துறையின் அறிவிப்பாக உள்ளது.
ஆனால் 90ஸ் கிட்ஸ் காலம் காலம் வசந்த காலம் தான், அதை நமது இந்த தலைமுறையும் பெறுவதற்கு வழிவகை செய்வோம் 90ஸ்ல் தீரன் சின்னமலை நகரப் பேருந்துகள் என்றென்றும் நினைவில் நீங்காத பேருந்துகளாக, குறித்த நேரத்திற்கு சென்று வரும் பேருந்துகளாக தங்கு தடை இன்றி அனைத்து கிராமங்களுக்கும் செல்லும் பேருந்துகளாக, ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் அசைக்க முடியாத வல்லமை பெற்றிருந்தது என்பது இன்று நினைத்தாலும் மகிழ்ச்சி அடையக்கூடிய ஒன்றாகும்.
இந்த பேருந்து கால அட்டவணை கிடைப்பதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த
போக்குவரத்து துறை அமைச்சர் திரு.சிவசங்கர் (044-25678843 , 044-25671475 , 044-25671120)
ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ திரு பழனியாண்டி (9443789999)
பேருந்து கால அட்டவணை என்பது மக்களுக்கானது அது உடனே வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்ட கரூர் அரசு போக்குவரத்துக் கழக ஜெனரல் மேனேஜர் திரு எஸ் சிவசங்கரன் (9487898199)
பயணிகளோடு பயணிகளாக இணைந்து பயணிகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வரும் குளித்தலை பிரான்ச் மேனேஜர் திரு ராஜேந்திரன் (94878 03592)
அனைத்து தகவல்களையும் கணிப்பொறியில் ஏற்றி விரைவில் கிடைக்க வழி செய்த கரூர் கண்ட்ரோல் ரூமில் பணிபுரியும் திருமதி வனிதா (9442501872)
பேருந்துகளின் நேரங் கால அட்டவணை கேட்டு பெற்ற வைக்க மனு அளித்த திண்டுகரை திரு.பரிமணம் (9942374797)
கால அட்டவணையை சத்திரம் பேருந்தில் பேருந்து நிலையத்தில் வைப்பதற்கு உதவி செய்த
திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் IAS (7397389311)
திருச்சி மாநகர தலைமை பொறியாளர் திரு சிவபாதம் (9842466621)
திருச்சி மாநகர துணை மேயர் திருமதி திவ்யா (9994088431)
களத்தில் முன் நின்று செயல்பட்ட சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.அய்யாரப்பன் (9677734351)
இரவு என்றும் பாராமல் களத்தில் பணிபுரிந்து போக்குவரத்து கால அட்டவணையை அமைத்திட்ட சத்திரம் பேருந்து நிலைய இளநிலை உதவி பொறியாளர் மதன் (9095098901)
மேல குறிப்பிட்டுள்ள அனைவருக்கும் &
உடனடியாக செய்தி வெளியிட்ட திருச்சி விஷன் பத்திரிகைக்கும்
சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து பெட்டவாய்த்தலை மற்றும் குளித்தலை செல்லும் நகர பேருந்து பயணிகளின் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.