
திருச்சி, ஸ்ரீரங்கம், அக்.26-
ஸ்ரீரங்கம் மேலவாசல் 2 வது வார்டை சேர்ந்தவர் கவிதா. அப்பகுதியில் சுமார் 50 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகிறார்கள், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கழிவுநீர் வடிகால் கட்டப்பட்ட நிலையில் திறந்து கிடக்கும் கழிவுநீர் செல்லும் கால்வாயின் அவலநிலை சிலாப் மூடி போட பலமுறை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எடுத்து கூறியும் சிறிதும் செவி சாய்க்காத அதிகாரிகள் நிதி பற்றாக்குறை என்று திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட நிர்வாகம் கை விரித்தது. அக்.10 அன்று ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பிச்சை எடுத்து நிதி திரட்டி அந்த நிதியை தமிழ்நாடு துணை முதல்வரிடம் கொடுக்கும் போராட்டம் என அறிவிக்கப்பட்டது. அதன் எதிரொளியாக மாநகராட்சி நிர்வாகம் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த வேண்டாம் எனவும் உடன் நடவடிக்கை எடுத்து கழிவுநீர் செல்லும் கால்வாய்க்கு மூடி போடப்படும் என உத்திரவாதம் கொடுத்ததால் பிச்சை எடுக்கும் போராட்டம் கைவிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக அக்.20 அன்று சிலாப் மூடி போடப்பட்டது.