கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளி – திருச்சி எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத் திறப்பு விழா நாள்: 5 டிசம்பர் 2024

கமலா நிகேதன் மாண்டிச்சோரி பள்ளியானது கல்வியுடன் தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க உயர் படிநிலையை எடுத்துள்ளது. உயர் தரமான எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தை தமிழ் நாட்டில் முதன் முதலாக இன்று கமலா நிகேதன் பள்ளியில் தொடங்கப்பட்டது.

எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகம் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மண்டலம் மூன்றின் தலைவர்
மு.மதிவாணன் கமலா நிகேதன் மாண்டிசோரி பள்ளி நிர்வாக இயக்குநர் சத்தியமூர்த்தி, பள்ளியின் தாளாளர் கீதாஞ்சலி சத்தியமூர்த்தி, பள்ளியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) திரு.மகேஷ் சத்தியமூர்த்தி, பள்ளி முதல்வர் திருமதி. மாலா சிவக்குமார் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர். மேலும் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

புதுமை மற்றும் தொழில்நுட்பத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட பள்ளியின் அதிநவீன எதிர்கால செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகத்தின் முக்கிய அம்சங்கள்:

Advanced Robotics, Flight simulation, Aero modelling, VR & AR, How and Why நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது.

நிகழ்வின் முக்கிய சிறப்பம்சமாக கமலா கல்வியாளர் எந்திரம் (Kamala Al Educator Robot) வெளியிடப்பட்டது. இது AI இயங்கும் கல்விக் கருவியாகும், இது பின்வருவனவற்றைக் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது.

பன்மொழித் தொடர்பு (integrate multilingual communication), நிகழ் நேரப் பதில் (real time responsiveness), (object recognition), (robotic mobility) கல்வியாளர்களுக்கும் கற்பவர்களுக்கும் இணையற்ற ஆதரவாளராக செயல்படும் என்பதில் ஐயமில்லை.

இந்த நிகழ்வில் KN Future Hack 2024 ஒரு பள்ளி அளவிலான தேசிய Hackathon அறிமுகப்படுத்தப்பட்டது. இது இரண்டு முக்கிய கருப்பொருள்களான நிலைத்தன்மை

மற்றும் பசுமை தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்கியம் (Sustainability & Green Tech)

ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டி

மாணவர்களை ஒன்றிணைந்து செயல்படவும், புத்தாக்க ரீதியாக சிந்திக்கவும்,

தொழில்நுட்பத்தின் மூலம் உலகில் நன்னமை வழியில் தீர்வு காணவும் ஊக்குவிக்கிறது.

கமலா கல்வியாளர் எந்திரம் (Kamala Al Educator Robot) மற்றும் KN Future Hack

2024 தொடங்கப்பட்டதன் மூலம், கமலா நிகேதன் பள்ளியானது, புதுமையான கல்வியில்

முன்னணியில் உள்ள இடத்தை உறுதிப்படுத்துகிறது. வேகமாக வளர்ந்து வரும்

தொழில்நுட்ப உலகில் வெற்றிபெறத் தேவையான திறன் மற்றும் அறிவைக் கொண்டு

மாணவர்களை மேம்படுத்துகிறது.’

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    Ambedkar Jayanti celebration by AMMK executives

    On the occasion of the 135th birth anniversary of the great jurist Dr. B.R. Ambedkar, who was the basic brain of the Indian Constitution, On behalf of the Trichy South…

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *