பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும் – தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் திருச்சியில் நடைபெற்ற மாநில மாநாட்டில் தீர்மானம் – ஆய்வறிக்கை வெளியீட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி டிச 05

தோழி பெண் தொழிலாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் மாநில அளவிலான பெண் தொழிலாளர்கள் மாநாடு மற்றும் உள்ளக புகார் குழு ஆய்வாரிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள டி.எம்.எஸ்.எஸ் ஹாலில் திருப்பத்தூர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு மாநாட்டை துவக்கி வைத்து ஆய்வறிக்கை வெளியிட்டார்.

இந்நிகழ்வில் கரூர் நாகலட்சுமி, புதுக்கோட்டை லலிதா, தர்மபுரி லட்சுமி, தஞ்சாவூர் சாமுண்டீஸ்வரி மற்றும் மாநில பெண் தொழிலாளர்கள் அமைப்பின் நிர்வாகி சுந்தரபாபு, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் விஜயலட்சுமி, தேசிய மக்கள் சுகாதார அமைப்பின் நிர்வாகி அமீர்கான், திருச்சி சீதாலட்சுமி, உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து திரளாக பெண்கள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இம்மாநாட்டில் பெண் தொழிலாளர்களுக்கென தனி அமைச்சகம் உருவாக்க வேண்டும், பாதுகாப்பான வேலை இடம் உறுதி செய்ய உள்ளக புகார் குழுவினை அனைத்து பணியிடங்களிலும் அமைத்து கண்காணிக்க தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும், தொழிலாளர்கள் நலத்துறை உள்ளக புகார் குழுவினை நடைமுறைப்படுத்துவதில் பங்கேற்கச் செய்ய தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறது,
அனைத்து வகை தொழிலாளர்களையும் தொழிலாளர்களாக அங்கீகரித்து அரசின் அனைத்து தொழிலாளர்கள் சட்ட விதிமுறைகள் மற்றும் சமூக பாதுகாப்புக்கு திட்டங்களுக்கு கிடைக்க செய்ய தமிழக அரசு அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *