
பாரதிய ஜனதா கட்சியின் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தின் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கான மண்டல் தலைவர்களை தேர்ந்தெடுப்பதில் ஜெய் சதீஷ் தலைமையில் மெகா தேர்தல் மோசடி.
- பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு நிர்வாகிகள் ஏற்கனவே தீவிர உறுப்பினர்களாக உள்ளனர். ஆனால் அவர்களுக்கு முறைப்படி தீவிர உறுப்பினருக்கான படிவம் இதுவரை வழங்கப்படவில்லை.
- கிளை தலைவருக்கான உறுப்பினர்கள் சேர்த்தும் இதுவரை எந்த கிளை கமிட்டியும் அமைக்கவில்லை. கிளைத் தலைவரும் தேர்ந்தெடுக்கவில்லை.
- நாளை நடைபெற இருக்கும் மண்டல் தலைவருக்கான கலந்தாய்வு கூட்டத்திற்கு முறைப்படி இதுவரை என்று நிர்வாகிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் கிளை தலைவர்களுக்கும் தீவிர உறுப்பினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை.
- திரு ஜெய் சதீஷ் அவர்கள் நாளை நடைபெற இருக்கும் மண்டல் தலைவருக்கான கலந்தாய்வு கூட்டத்தை பாஜகவின் அனைத்து நிர்வாகிகளுக்கும் பொறுப்பாளர்களுக்கும் தெரியாமல் தீவிரவாத கூட்டம் நடத்துவது போல் மிகவும் ரகசியமாக நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
- முக்கியமாக தாழ்த்தப்பட்ட மற்றும் மிகவும் தாழ்த்தப்பட்ட பொருளாதாரத்தில் பின்தங்கிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் பட்டியலின சமுதாய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் நாளை நடைபெற இருக்கும் மண்டல் தலைவருக்கான கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் இருப்பதற்கு ரகசியமாக திட்டமிட்டுள்ளனர்.
- திரு ஜெய் சதீஷ் அவர்கள் மரியாதைக்குரிய மாநிலத் தலைவர் திரு அண்ணாமலை ஜி அவர்களை ரகசியமாக தோற்கடிப்பதற்கும் அவரின் வெற்றி வியூகத்தை வரும் சட்டமன்ற தேர்தலில் முழுமையாக சீர்குலைப்பதற்கும் திரு ஜெய் சதீஷ் மற்றும் மாவட்ட பொதுச் செயலாளர் நமசுராஜா ரகசிய திட்டம்.
- குறிப்பாக நாளை நடைபெற இருக்கும் மண்டல் கலந்தாலோசணைக்காண கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் திரு ஜெய் சதீஷ் அவர்களோ அல்லது மாவட்ட பொதுச் செயலாளர் நமசு ராஜா அவர்களோ அல்லது மண்டல் தலைவரோ மண்டல் பொதுச் செயலாளரோ இதுவரை எந்த ஒரு தீவிர உறுப்பினர்களுக்கும் கிளைத் தலைவர்களுக்கும் மற்ற ஏனைய மாவட்ட மண்டல கட்சிப் பொறுப்பாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாகவோ அல்லது whatsapp வாயிலாகவோ அல்லது குறுஞ்செய்தி வாயிலாகவோ தகவல் முறைப்படி தெரிவிக்கவில்லை.
- மாவட்டத் தலைவர் திரு ஜே சதீஷ் அவர்களின் பினாமி தொழில் சார்ந்த புதிய பொறுப்பாளர்களையும் நிர்வாகிகளையும் மண்டல் தலைவர்களையும் நியமிப்பதற்கு மறைமுகமாக சதி வேலை செய்து கொண்டிருக்கிறார்.
- இப்படி அனைத்து நிர்வாகிகளையும் பொறுப்பாளர்களையும் தீவிர உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட மிகவும் தாழ்த்தப்பட்ட பட்டியல் இன பொறுப்பாளர்களையும் ஒருதலை பட்சமாக வேண்டுமென்றே புறக்கணித்து நாளைய மண்டல் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது. இதனை மாநில தலைமை உடனடியாக தலையிட்டு இந்த கலந்தாய்வு கூட்டத்தினை ரத்து செய்யுமாறு பட்டுக்கோட்டை சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் தீவிர உறுப்பினர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
- மேலும் தற்போது திரு ஜெய் சதீஷ் அவர்களால் புறக்கணிக்கப்படும் அனைத்து நிர்வாகிகளும் தீவிர உறுப்பினர்களும் ஏனைய பொறுப்பாளர்களும் மரியாதைக்குரிய மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் தீவிர விசுவாசிகள் ஆவார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதற்காகத்தான் அவர்களை புறக்கணிக்கும் வகையில் திரு ஜெய் சதீஷ் அவர்கள் ரகசியமாக இந்த கலந்தாய்வு கூட்டத்தினை யாருக்கும் தெரியாமல் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார்.
- பெரும்பான்மை தீவிர உறுப்பினர்கள் கிளை தலைவர்கள் சம்மதம் இல்லாமல்b எப்படி மண்டல் கலந்தாய்வுக்கான கூட்டத்தினை மாவட்ட தலைவர் திரு ஜே சதீஸ் அவர்கள் நடத்துகிறார் என்பது கேள்விக்குறி.
- திரு ஜெய் சதீஷ் அவர்கள் அவருடைய நெருங்கிய நண்பர்களுக்கும் பினாமி வர்த்தக பார்ட்னர்களுக்கும் உதவும் வகையில் போலியான தீவிர உறுப்பினர் பட்டியல் தயார் செய்து நாளை மண்டல் தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற இருக்கிறது இதனை மாநில தலைமை உடனடியாக ரத்து செய்யுமாறு பட்டுக்கோட்டை சட்டமன்றத்திற்கு உட்பட்ட அனைத்து பொறுப்பாளர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
- என்றும் தேசப்பணியில்
அண்ணாமலை டீம்
பட்டுக்கோட்டை சட்டமன்றம்
