

நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடாது பெய்து வரும் அடை மழை என்று தெரிந்தும் திருச்சி மாவட்ட ஆட்சியர் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்காததை SDPI கட்சி – கல்வியாளர் அணி திருச்சி மாவட்டம் வன்மையாக கண்டிக்கிறது.
மேலும் கன மழையிலும் பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் மருங்காபுரி வளநாடு கைகாட்டி அருகே அரசு பள்ளி மாணவருக்கு விபத்து ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
மாவட்ட ஆட்சியரின் இந்த செயலால் விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவருக்கான அனைத்து வகையான மருத்துவ உதவியும் செய்ய வேண்டும் என்று SDPI கட்சி, கல்வியாளர் அணி சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
இனி வரும் காலங்களில் மழையின் தன்மையை பொறுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளி குழந்தைகள் மீது அக்கறை கொண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
- K.அப்துல் அஜீஸ் M.phil.,MSW.,LLB.,
கல்வியாளர் அணி மாவட்ட தலைவர்
SDPI கட்சி
திருச்சி தெற்கு மாவட்டம்.