கள்ளக்குறிச்சியில் ரூ. 153.86 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் – தமிழக அரசு உத்தரவு

கள்ளக்குறிச்சி நகராட்சி 09.08.2021-ல் முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு பின்பு. 02.05.2023 முதல், தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. 21 வார்டுகளை உள்ளடக்கி 15.87 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ள இந்நகராட்சியில், தற்போது தோராயமான மக்கள் தொகை 57,456 ஆக உள்ளது. இந்த நகராட்சிக்கு, நகரை ஒட்டியுள்ள கிராம பகுதியிலிருந்து பொதுமக்கள் குடிபெயர்ந்து வருவதால் நாளுக்கு நாள் மக்கள் தொகை உயர்ந்து வருகிறது. தற்போது உள்ள மக்கள் தொகை மற்றும் எதிர்கால வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்து மேம்படுத்தி தர வேண்டியது மிகவும் அவசியமாகிறது. எனவே, இந்நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த 2024-2025-ஆம் ஆண்டின் சட்டமன்ற மானிய கோரிக்கையில் அறிவிப்பு செய்யப்பட்டது.மேற்காணும் அறிவிப்பின் அடிப்படையில், கள்ளக்குறிச்சி நகராட்சியில் ரூ.153.86 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டத்தினை செயல்படுத்தவும். ரூ.20.93 கோடி செலவில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை 10 வருடங்களுக்கு இயக்கவும் மற்றும் பராமரிக்கவும், ரூ.6.84 கோடி செலவில், கழிவுநீர் சேகரமாகும் அமைப்புகளை 5 வருடங்களுக்கு பராமரிக்கவும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள். மேற்காணும் திட்டத்தினால், மொத்தம் 14,079 குடியிருப்புகளுக்கு பாதாளசாக்கடை வீட்டிணைப்புகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு இத்திட்டத்தினை செயல்படுத்தும் போது கழிவுநீர் முறையாக சேகரிக்கப்பட்டு சுத்திகரித்து வெளியேற்றுவதால் இந்நகரின் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுப்புற சுகாதாரம், மேம்பட்டு, பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *