உய்யகொண்டான் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்திய அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

.

திருச்சி மாவட்டம், மேற்கு வட்டத்திலுள்ள வண்ணாரப்பேட்டை மாநகராட்சி பூங்கா அருகில், உய்யகொண்டான் வாய்க்காலின் இடது கரையில் ஒரு பகுதியை, சட்டத்திற்கு புறம்பாக ஆக்கிரமித்து, சில நாட்களுக்கு முன்னர் ஒரு கட்டிடம் கட்டப்பட்டு வந்தது.

நீர்நிலையில் இருந்து குறைந்தபட்சம் 15 மீட்டருக்குள் எந்த கட்டிடமும் கட்டப்படக்கூடாது என்கின்ற விதியை காற்றில் பறக்க விட்டு, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில், கட்டப்பட்டு வந்த கட்டிடத்தை உடனடியாக நிறுத்தி, ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரி , கடந்த செப்டம்பர் மாதம் 30-ம் தேதியன்று (30.09.2024) மாவட்ட ஆட்சியரிடம் (TN/WRD/TRY/I/COLLMGDP/30SEP24/10282575) அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், திருச்சி மாநகர் மாவட்டம் சார்பாக, தில்லைநகர் பகுதி கழகச் செயலாளர் திரு S. கருப்பையா, உறையூர் பகுதி கழகச் செயலாளர் திரு.கல்நாயக் சதீஷ், நிர்வாகிகள் திரு N.S. தருண், திரு கல்லணை M.L.குணா, திரு கைலாஷ் ராகவேந்திரா, 26-வது வட்டக் கழகச் செயலாளர் திரு.சேது கார்த்திக் ஆகியோர் மனு அளித்தனர்.

அதேபோல், பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டு வரும் இடத்தைப் பற்றி, மாநகராட்சி ஆணையரிடம் கடந்த 30.09.2024 அன்று மனு அளிக்கப்பட்டது.

இதன் எதிரொலியாக, நில அளவை செய்து தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வாயிலாக { கோ.14/உ.பொ ( திருச்சி) /ஆ. பா. பிரிவு/2024/23.10.2024 } வட்டாட்சியர், திருச்சி மேற்கு வட்டம் அவர்களுக்கு படிவம் 1- ல் உரிய விபரங்களை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

மேலும் விவரங்கள் கிடைக்க பெற்றவுடன், உண்மை தன்மையை ஆராய்ந்து, நீர்வளத்துறை ஆற்று பாதுகாப்பு பிரிவு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என்ற விபரம், கடிதம் வாயிலாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *