திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி மக்களிடம் குறைதீர்க்கும் மனுக்களை பெற்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திருச்சி: டிசம்பர்15

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி, திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட அரியமங்கலம் பகுதி 34a, 49a,35,16,16a,35a,வது வார்டு பகுதியில் மக்களிடம் மனுக்களைப் பெற்றார் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர்.

இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளிகள்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்று அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார்.

மேலும் இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறுகையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த அரியமங்கலம் , மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் 22 கோடியே 59 லட்சத்து 65 ஆயுரம் ரூபாய் மதிப்பீட்டில் மாமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் சுகாதார ஆய்வாளர் அலுவலகம் சாலை அமைக்கும் பணி, குடிநீர் வசதி, மழைநீர் வடிகால் வசதி, அங்கன்வாடி, சமுதாயக்கூடம், ஊரக சுகாதார நிலையம் கட்டுதல், தாமரைக் குளம் சீரமைத்தல், வாய்க்கால் தடுப்பு சுவர் அமைத்தல்உ,ட்பட பல்வேறு பணிகளை இந்த மூன்று ஆண்டுகளில் பணிகளை முடித்து அதை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாகவும் எனினும் பொது மக்களின் அனைத்து குறைகளையும் தீர்க்க முடியுமா என்றால் அதற்கு ஒரே தீர்வு இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தான் என்றும் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினராக நானும் மாநகராட்சி கவுன்சிலர் மற்றும் அரசு அதிகாரிகள் அனைவரும் பொதுமக்களாகியஉங்களைநேரில் சந்தித்து அனைவரும் ஒன்று சேர்ந்து உங்களின் குறைகளை ஒரே இடத்தில் கேட்டறிந்து அதை அரசு அதிகாரிகளிடம் எடுத்துரைத்து அதற்கு உடனடி தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட கூட்டம் தான் இந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் என்றும்

தமிழக முதல்வர் அவர்களின் அறிவுறுத்தல் படி இந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நடத்தப்படுவதாகவும் இந்தக் கூட்டத்தில் கொடுக்கப்படும் மனுக்கள் அருகே அரசு அதிகாரியிடம் உடனடியாக வழங்கப்பட்டு அதற்கான தீர்வு கேட்கப்பட்டு வெகு விரைவில் முடிக்கப்படுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் எடுத்துரைத்தார்

மேலும் இந்நிகழ்வில் மாநகர செயலாளரும் மண்டல குழு தலைவருமான மதிவாணன், அரியமங்கல பகுதி செயலாளர் விஜயகுமார் மாநகராட்சி துணைப் பொறியாளர் ஜெகஜீவன் ராம் மாநகராட்சி இணை ஆணையர் சரவணன் வட்டாட்சிய ஜெயபிரகாஷம் தமிழ்நாடு மின்சார வாரியம் துணை நிர்வாக இயக்குனர் காளிதாஸ் மாமன்ற உறுப்பினர் சுரேஷ் வட்டக் கழக செயலாளர்கள் கருணாநிதி, செல்வம், ரங்கநாதன், சண்முகம், தங்கவேலு, கதிர்வேலு,
மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *