கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட ஆதவ் வேறு உள்நோக்கத்தோடு செயல்படுகிறார். – தொல்.திருமாவளவன்

கும்பகோணத்தில் நடைபெற உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி திருமணத்தில் பங்கு கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பர நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சிதமிழர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்


மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நிறைவேற்ற பார்க்கிறார்கள் அரசமைப்பு சட்டத்தை போற்றி, புகழ்ந்து கொண்டே அம்பேத்கரை பாராட்டி பேசி அரசமைப்பு சட்டம் மீது மூர்க்கமான தாக்குதலை பாஜக அரசு நடத்தி வருகிறது.

இவர்கள் ஏற்கனவே 375 ஆவது சட்டத்தைக் கொண்டு வந்து அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தினார்கள், முன்னேறிய வகுப்புகளுக்கு பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டு வந்தார்கள், 370 வது சட்டப்பிரிவை நீக்கினார்கள், சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தார்கள் இதெல்லாம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது.

வழிபாட்டு தளங்களுக்கான சட்டம் 1948 கொண்டு வந்து சட்டத்தை பொருட்படுத்தாமல் அதனை அவமதிக்கும் வகையில் நீதிமன்றம் வழியாக ராமர் கோயிலை கட்டி முடித்தனர், 

எனவே, தேசிய அளவில் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இந்த ஆபத்தை தடுக்க அனைவரும் அணி திரள வேண்டும்.

இது குறித்து விவாதத்தில் நாடாளுமன்றத்தில் கருத்துக்களை பதிவு செய்ய நா முயன்ற போது எனக்கு அனுமதிக்கவில்லை.

தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு விடுவித்த கோரிக்கையான 2475 கொடியை வெள்ள நிவாரணமாக கேட்ட பொழுது அதனை அலட்சியப்படுத்தி 944.80 கோடியை கொடுத்துள்ளனர். 

தமிழகத்திற்கு தேவையான உரிய நிதியை இந்திய ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.

அரசாங்கத்திற்கு எதிராக ஏதேனும் மாற்றுக் கருத்து கூறினால் இரண்டு, ஒன்று உறுப்பினர்கள் கொண்ட கட்சிகளை அனுமதிப்பதில்லை இதுபோன்று காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகளை அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது.

அம்பேத்கருக்கு நினைவிடம் அமைத்து பெருமைப்படுத்தினாலும் இன்னொரு புறம் அவருடைய சிந்தனை முழுமையாக சிதைக்கும் வகையில் செயல்படுவது அவர்களது நோக்கத்தை தெரியப்படுத்துகிறது. அரசியலமைப்பு சட்டத்தை சிதைக்கும் வகையில் வெளிப்படையாக செயல்படுகின்றனர் என்பது நிதர்சனமான உண்மையாகும்

இதை சுட்டிக்காட்ட முயன்ற போது நாடாளுமன்றத்தில் என் ஒலி வாங்கி அனைக்கப்பட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5000 நிதி உதவி வழங்க வேண்டும் என விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். 

வேல் முருகன் திமுக அரசை விமர்சனம் செய்வது அவரது நிலைப்பாடு. அது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும். 

ஆனால், அரசியலுக்காக தான் கூட்டணி கட்சிகளை திமுக பயன்படுத்துகிறது என்கிற அவரது விமர்சனத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.

அரசமைப்பு சட்டத்தை 13 பேர் கொண்ட நீதிபதிகளை உள்ளடக்கிய பெஞ்ச் திருத்தம் செய்யலாம் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. 

ஆனால் அதன் அடிப்படை கூறுகளில் கை வைக்க கூடாது.

அரசமைப்பு சட்டத்தின் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் உள்ளது. இன்று பா.ஜ க அரசு தேர்தல் ஆணையத்தையே கேள்விக்குள்ளாக்கி அதன் அதிகாரத்தையே பறிக்கிறார்கள். 

அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை கொண்டு வர பார்க்கிறார்கள். 

ஐந்தாண்டு காலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட கோடி அரசை யாரும் கேள்வி எழுப்பக்கூடாது அந்த காலத்தில் அவர்கள் உறுதிப்படுத்துவது என்ற நோக்கத்தில் இந்த ஒரே நாடு ஒரே சட்டத்தை கொண்டு வருகின்றனர். அமெரிக்காவில் இருப்பதைப் போன்ற நிலையை இங்கு கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். 

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தால் கூட்டணி கட்சிகளின் தயவே இல்லாமல் அவர்கள் ஆட்சி அமைக்கலாம். எதிர்க்கட்சிகள் யாரும் கேள்வி கேட்க முடியாது அப்படி ஒரு நிலையை தான் கொண்டுவர பார்க்கிறார்கள்.

இது மிகவும் ஆபத்தானது ஜனநாயக அரசாணை சட்டத்திற்கு எதிரானது.

பொருளாதார விரயத்தையும், நேர வைத்தியத்தையும் கட்டுப்படுத்த ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வருகிறோம் என்கிறார்கள் அது அப்பட்டமான பொய்.

அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் நான் பங்கேற்காதது குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்து விட்டேன். என்னை யாரும் அழுத்தம் கொடுத்து இணங்க வைக்க முடியாது.

சில நேரங்களில் முதல்வரை பார்க்க முடியாத தருணங்களில் மற்ற அமைச்சர்களை பார்த்து பேசுவது உண்டு அதன்படி அமைச்சர் எ.வ. வேலுவை நான் சந்தித்தேன்.

ஆதவ் அர்ஜுன் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கக்கூடிய சூழலில் இதுபோன்ற முரண்பாடான கருத்தை கூறுவது தவறு அவர் அப்படி பேசக்கூடாது.

ஆறு மாதத்திற்குப் பின்பு கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டுமென்றால் அவர் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு வேறு ஒரு செயல் திட்டம் இருப்பதால்தான் இது போன்ற கருத்துக்களை தொடர்ந்து பேசி வருகிறார் என்பது தற்பொழுது உணர முடிகிறது. எங்கள் கட்சியின் நடைமுறையின் அடிப்படையில் தான் அவர் நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

பேட்டியின் போது திருச்சி மாநகர மாவட்ட செயலாளர் புல்லட்.லாரன்ஸ், ஜெயக்குமார், மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    செய்தியாளர்கள் மீதான கொலைவெறி தாக்குதல் – வல்லூறு ஆசிரியர் சமூக ஆர்வலர் முனைவர் மோகன்ராம் கண்டனம்

    வல்லூறு பத்திரிகை குழுமம் வன்மையாக கண்டிக்கிறது ✍️✍️…தமிழக அரசே பத்திரிகையாளர்களுக்கு பாதுகாப்பு கொடு….விதிமீறல் குவாரியை படம் பிடிக்க சென்ற திருச்சி நியுஸ் தமிழ் 24×7 பத்திரிகையாளரை தாக்க 50 பேருடன் வந்து ஸ்ரீரங்கம் தொகுதிதிமுக MLA பழனியாண்டி …. கரூரில் கனிம…

    துரை வைகோவின் தொடர் முயற்சியின் அடுத்த நகர்வாக, அவருடைய ஒருங்கிணைப்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி மண்டல திட்ட இயக்குநர் (Project Director, NHAI Trichy), திட்ட ஆலோசகர் (Project Consultant, NHAI) மற்றும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM, Trichy) தென்னக ரயில்வே பொது மேலாளர் ஒருங்கிணைப்பு கூட்டம்

    நேற்று திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (DRM) அவர்களை துரை வைகோ MP அவரது அலுவலகத்தில் சந்தித்தை தொடர்ந்து இன்று (30.01.2026) தென்னக ரயில்வே பொது மேலாளர் (General Manager, Southern Railway) அவர்களை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்தார் துரை…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *