திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலைய அலுவலகரிடம் இருந்து ₹97,000 கணக்கில் வராப்பணம் பறிமுதல் – லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி

திருச்சி மாநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.மாவட்ட நிலைய அலுவலராக ஜெகதீஷ் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசுக்கடை, ரைஸ்மில், வணிக நிறுவனங்கள் என பல்வேறு இடங்களிலும் தீயணைப்பு துறையினர் லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்தது.

மேலும் தீபாவளி நேரம் என்பதால், தற்காலிக தீபாவளி பட்டாசு கடைகள் அமைப்பதற்காக உரிமம் மற்றும் தடையில்லா சான்று பெறுவதற்காக லஞ்சம் வசூலிக்கப்பட்டதாகவும் தொடர்ந்து புகார்கள் லஞ்ச ஒழிப்பு துறைக்கு வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் இன்று மதியம் டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அலுவலகத்தில் சோதனை நடந்தது. அங்கு பெரிதாக எதுவும் சிக்காத நிலையில், பின்னர், மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் ஜெகதீஸ் வாகனத்தை சோதனையிட்டனர் லஞ்ச ஒழிப்புத் துறையினர்.

அப்போது, அந்த வாகனத்தில் இருந்த சீருடையில் ரூ.97 ஆயிரம் ரொக்கம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் திருச்சி தீயணைப்புத்துறை அலுவலர்கள் மத்தியில் பரபரப்பு நிலவி வருகிறது.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    தேர்தல் புறக்கணிப்பில் இறங்கும் கிராமம் – விடியல் தராத கட்சிகளுக்கு கடும் கண்டனம் – கட்சியினர் அதிர்ச்சி

    தேர்தலை புறக்கணிக்க போவதாக முதலமைச்சருக்கு கோரிக்கை.முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என்று காத்திருக்கும் மக்கள். திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் கிராமத்தில் நந்தவனம் என்ற இடத்தில் 35 குடும்பத்தைச் சார்ந்த மக்கள் கடந்த 16 ஆண்டுகளாக எந்த…

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *