

19/12/24
அமித்ஷா பேச்சை கண்டித்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக ஆர்ப்பாட்டம்
அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைக் கண்டித்து திமுக சார்பில் தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது அதன் தொடர்ச்சியாக திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தெற்கு மாவட்ட திமுக வின் சார்பாக சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாநகரக் கழகச் செயலாளர் மு மதிவாணன் தலைமையில், தலைமை செயற்குழு உறுப்பினர் வண்ணை அரங்கநாதன் சேகரன் சபியுல்லா பகுதி செயலாளர் நீலமேகம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. பகுதி கழகச் செயலாளர் மோகன் ஆர்ப்பாட்டத்தில் நிறைவில் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் கீழ் வருமாறு கோஷங்களை எழுப்பினர்

கண்டிக்கின்றோம் ! கண்டிக்கின்றோம்!! அண்ணல் அம்பேத்கரை இழிவு செய்த அமித்ஷாவை கண்டிக்கின்றோம்
பதவி விலகு! பதவி விலகு!! பாவக்காரன் அமித்ஷாவே பதவி விலகு
பாதுகாப்போம்! பாதுகாப்போம்!! பாதகர்களிடமிருந்து அரசியல் சாசனத்தை பாதுகாப்போம்
மன்னிப்புக்கேள் ! மன்னிப்புக்கேள் !! அமித்ஷாவே மன்னிப்புக் கேள்
கொலைகார பாஜகவே உனக்கு அம்பேத்கர் என்றால் இளக்காரமா?
சர்வாதிகாரி அமித்ஷாவே உனக்கு அம்பேத்கர் என்றால் அவமானமா?
எதிர்க்கின்றோம் ! எதிர்கின்றோம்!! புரட்சியாளர் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை எதிர்க்கின்றோம் ! எதிர்கின்றோம்!!
நிராகரிப்போம் ! நிராகரிப்போம்!! பாஜகவை நிராகரிப்போம் !!!
நிராகரிப்போம் ! நிராகரிப்போம்!! பாஜகவுடன் கள்ளக்கூட்டணியில் உள்ள அதிமுகவை நிராகரிப்போம்
அம்பேத்கர் வாழ்க! பெரியார் வாழ்க! முத்தமிழறிஞர் கலைஞர் வாழ்க!
வாப்பாக்கத்தில் மாவட்ட மாநகர ஒன்றிய பகுதி பேரூர் கிளைக் கழகங்கள் நிர்வாகிகள் பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கழக முன்னணியினர் பொதுமக்கள் என பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
