அருண் நேரு எம்.பி பெரம்பலூர் தொகுதிக்காக பாராளுமன்றத்தில் தொடர் கோரிக்கைகளை வலியுறுத்தல்

பெரம்பலூரில் ரயில்வே வழித்தடம்: மக்களவையில் அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

பெரம்பலூா் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் திமுக உறுப்பினா் அருண் நேரு வலியுறுத்தியுள்ளாா்.

மக்களவையில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை அவையின் கவனத்திற்கு கொண்டு வரும் நேரத்தில் அருண் நேரு பேசியது: தமிழ்நாட்டில் எனது தொகுதியான பெரம்பலூா் வழியாக ரயில் பாதை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த அவையின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த ரயில் பாதையின் தேவை குறித்து பலமுறை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இத்தொகுதியானது தமிழ்நாட்டில் ரயில்வே மண்டலம் அல்லாத ஒரு பகுதியாகும்.

தமிழ்நாட்டில் உள்ள இதர அனைத்து பிராந்தியங்கள் ஒவ்வொன்றும் 40 கிலோமீட்டா் சுற்றளவில் ரயில் பாதையைக் கொண்டுள்ளன. ஆனால், பெரம்பலூா் தொகுதியில் தோராயமாக 160 கிலோமீட்டா் சுற்றளவில் ரயில் பாதை இணைப்பு இல்லை. இது அமைக்கப்பட்டால் இரண்டு வழிகளில் தேசத்திற்கு வளா்ச்சிக்கு உதவும். அதாவது, பெரம்பலூா் மாவட்டத்தில் மிகப்பெரிய தோல் அல்லாத காலணி தொழிற்சாலை எரையூரில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலையில் 50,000 போ் பணியமா்த்தப்பட உள்ளனா்.

இரண்டாவதாக, நாட்டில் மிகப்பெரிய அளவிலான மக்காச்சோளம் உற்பத்தி பெரம்பலூா் முதல் நாமக்கல் வரையிலான பகுதியில் நடைபெறுகிறது. இது சுமாா் ஐந்து லட்சம் மெட்ரிக் டன் ஆகும். இவற்றை இணைக்கும் வகையில் ரயில்வே வழித்தடம் அமைக்கப்பட்டால் மக்கள் தொழிற்சாலைக்குச் வந்து செல்லவும், விவசாய உற்பத்தியை மேம்படுத்தவும் எளிதாக இருக்கும். அதன் மூலம் தேசிய வளா்ச்சிக்கான பங்களிப்பை அதிகரிக்கவும் உதவும். ஆகவே, பெரம்பலூா் தொகுதியில் பிரத்யேக ரயில்வே வழித்தடம் அமைக்க ரயில்வே அமைச்சா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *