அமைச்சரை அழைத்த Dassault Systems நிறுவனம்!

நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு!

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிரான்ஸ் நாட்டின் Dassault Systems நிறுவனத்தின் தலைமையகத்திற்கு சென்று கல்விச் சார்ந்த உரையாடலில் கலந்துகொண்டார்.

Dassault Systems நிறுவனம் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் உள்ள 71 பள்ளிகளில் திறன் பயிற்சிகளை வழங்கி வருகின்றது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் அவர்களின் பிரான்ஸ் நாட்டிலும் மாணவர்களுக்குப் பயிற்சி வழங்கி வருகின்றது.

‘கனவு ஆசிரியர்’ விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரான்ஸ் நாட்டில் கல்விச் சுற்றுலா மேற்கொண்டு வருகின்றார் அமைச்சர் அன்பில் மகேஸ். இதனை அறிந்த Dassault Systems நிறுவனம் தங்கள் தலைமையகம் வருமாறு அமைச்சருக்கு அழைப்பு விடுத்தது. தொடர்ந்து Dassault Systems நிறுவனத்தின் தலைமையகம் சென்ற அமைச்சர் அந்நிறுவனத்தின் 2040ஆம் ஆண்டிற்கான இலக்குகளை விவரிக்கும் காட்சிப் படங்களைப் பார்வையிட்டார்.

தொடர்ந்து அந்நிறுவன அதிகாரிகளுடன் கல்விச் சார்ந்த கலந்துரையாடலிலும் கலந்துகொண்டார். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பள்ளிக் கல்வித் தொடர்பான திட்டங்கள் குறித்து அந்நிறுவனத்தாரிடம் எடுத்துரைத்தார்.
‘தமிழ்நாட்டில் அதிகளவிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க காத்திருக்கிறோம்’ எனும் விருப்பத்தை அப்போது தெரிவித்துள்ளார்கள். இதனை தமிழ்நாட்டின் முதலமைச்சரிடம் எடுத்துரைத்து செயல்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலயே முதன்முறையாக AI தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை தமிழ்நாடு அரசு மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் மேற்கொண்டுள்ளது. அந்த வரிசையில் தற்போது Dassault Systems நிறுவனமும் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி வழங்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது!

இந்நிகழ்வின் போது தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் திரு.நரேஷ், இணை இயக்குநர் முனைவர் திரு.இராஜேந்திரன் மற்றும் Dessault நிறுவனத்தின் திரு.Valerie Ferret, திரு.Thierry Chevrot, திரு.Dominique Anderson ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *