சிறு வியாபாரிகள் வயிற்றில் வணிகர் சங்க பேரவை பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அடிப்பதா?

திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் .

சிறு வியாபாரிகள் வயிற்றில் வணிகர் சங்க பேரவை பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அடிப்பதா.

திருச்சியில் காலங்காலமாக பெரிய கடை வீதியில் தீபாவளி காலங்களில் தரைக்கடை போடுவது நடைமுறையில் உள்ளது. அதேபோன்று இந்த வருடமும் தரக்க கடை போடுவதற்காக தரைக்கடை சிறிய வியாபாரிகள் கடை போடுவதற்காக பொருளாதாரம் ஈற்றுவதற்காக தங்களுடைய குடும்பத்தில் உள்ள நகைகளோ அல்லது வெளியில் வட்டிக்கு பணம் வாங்கி போடும் சூழ்நிலையில் தான் உள்ளது. இந்த தரக்கடை மூலம் ஏறத்தாழ பொருளாதாரத்தில் பின்தங்கிய 1000 குடும்பங்கள் வாழ்வாதாரம் பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதை முடக்கும் சூழ்நிலையை வணிகர் சங்க மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அவர்கள் பெரிய கடைகளுடைய முதலாளிகளுடைய ஆலோசனையின் பேரில் சிறு வியாபாரிகள் உடைய வயிற்றில் அடிக்கிறார். இது வன்மையாக கண்டிக்க கூடிய செயல். தன்னுடைய பத்திரிகை யாளர் சந்திப்பில் கோவிந்தராஜ் அவர்கள் சாலை என்பது மக்கள் நடமாடுவதற்கு தான் வாகனங்கள் செல்வதற்கு தான் அங்கே கடைகள் அமைத்தால் எவ்வாறு செல்வார்கள் என்று தன்னுடைய பத்திரிகையாளர் சந்திப்பில் கூறி இருக்கிறார்கள். திருச்சி பெரிய கடைவீதியை பொருத்தவரையில் தீபாவளி பண்டிகைக்கு ஐந்து நாட்கள் முன்பாகவே அந்த சாலைகளில் எந்த வாகனமும் காவல்துறை அனுமதிப்பதில்லை காரணம் தர கடை வியாபாரிகள் அதிகமாக கடை போட்டு இருப்பார்கள் அதை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இருக்கும் என்ற நோக்கத்தில் இருசக்கர வாகனங்களை அல்லது நான்கு சக்கர வாகனங்களை உள்ளே அனுமதிப்பதில்லை இந்த சின்ன தகவலை கூட வணிகர் சங்கத்தினுடைய பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு அறியாமல் பொதுச்செயலாளராக இருந்து கொண்டிருக்கிறார். இந்த செயலை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம் தரக்கடை வியாபாரிகள் கடைகளை தடுக்காதே. அவர்களுடைய வாழ்வாதாரத்தை பிடுங்கி பெரும் முதலாளிகளிடம் கொடுக்காதே என்று கோஷத்தோடு இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தயவு கூர்ந்து சிறு கடை வியாபாரிகள் உடைய வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு அங்கே கடை அமைப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

அன்புடன்

எஸ் முஹம்மது பாரூக்

திருச்சி தெற்கு மாவட்ட வர்த்தக அணி தலைவர்
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் .

.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    என் சி சி பி ஏ (NCCPA) சார்பாக மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டமானது திருச்சியில் நடைபெற்றது

    இன்று திருச்சிராப்பள்ளி தலைமை அஞ்சலகம் முன்பாக மத்திய அரசனை கண்டித்து நேஷனல் குவார்டினேஷன் கமிட்டி ஆப் பென்ஷன் அஸ் அசோசியேசன் ( NCCPA)மற்றும், (AIPRPA)ஏ ஐ பி ஆர் பி ஏ , (AIBDPA)ஏ ஐ பி டி பி ஏ,…

    வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

    வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *