

தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒன்றாவது வார்டு பகுதியில் தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மலர் மாலை சூட்டி மலர்களை தூவி மலர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் கேப்டனின் நினைவை போற்றும் விதமாக அவர் பாணியிலேயே ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது ஸ்ரீரங்கம் பகுதி கழகச் செயலாளர் சக்திவேல் முன்னிலை வகித்து அன்னதானத்தை துவக்கி வைத்தார்.
வட்டக் கழக செயலாளர் சுரேஷ் மணிகண்டன் பகுதி நிர்வாகிகள் அன்பழகன் சசிகுமார் வட்டக் கழக நிர்வாகிகள் ராஜேஷ் இரண்டாவது வட்டக் கழக செயலாளர் ரங்கராஜ் மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
