

திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு கூட்டம் நகர்மன்ற தலைவர் செல்வராணி தலைமையில் 31.12.24 நடைப்பெற்றது. இளஞ்சிறார் நீதி குழுமம் உறுப்பினர் அஜந்தா, மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் முனைவர் பிரபு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு நிறுவனம் சார்ந்த பாதுகாப்பு அலுவலர் ஜெயசித்ரா, சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் ஸ்ரீவித்யா ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைப்பதன் அவசியம் முக்கியத்துவம் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் விவரம் மற்றும் அரசாணை 31 குறித்தும் குழந்தை திருமணம், பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, சட்டவிரோதமாக குழந்தை விற்றல் மற்றும் வாங்குதல் குறித்தும் குழந்தை நலக்குழு இளஞ்சிறார் நீதி குழு குழந்தைகள் உதவி மையம் 1098 பணிகள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். கூட்டத்தில் நகராட்சி அளவிலான குழந்தை பாதுகாப்பு குழு உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனார்.
