
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சிராப்பள்ளி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களும் மற்ற அணிகளை சேர்ந்தவர்களும் சிறப்புர ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
செய்தியாளர்களுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த டிடிவி தினகரன் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி சர்வாதிகாரப் போக்கோடு நடந்து கொள்வதாகவும் இடி அமின் ஹிட்லர் போன்று ஸ்டாலின் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த அவர் யார் அந்த சார் என்பது ஒரு மிகப் பெரிய ரகசிய கேள்வியாக உள்ளதாகவும் இந்த விஷயத்திற்காக ஆளும் கட்சி எதற்காக இவ்வளவு பதட்டப்படுகின்றது எனவும் கேள்வி எழுப்பினார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி மிகவும் வலிமையாக உள்ளதாகவும் 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக அறுதி பெரும்பான்மை பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழக வெற்றிக்கழகம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெறுமா என்ற கேள்விக்கு அவர் பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார்.
முழுமையான பேட்டியை காண எங்கள் youtube சேனல் உடன் இணைந்து இருங்கள்