

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வடக்கு தேவி தெரு காந்தி சாலை சந்திப்பில் உள்ள மிக சிறிய கோவில் அருள்மிகு மகா சக்தி தேவி மாரியம்மன் திருக்கோவில் ஆகும்.
மிகவும் எளிமையான இந்த கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் மகா கணபதி மகா சக்தி தேவி மாரியம்மன் காண்பதற்கு நேரில் அமர்ந்து புன்னகையோடு பேசுவது போலவே மிகவும் அற்புதமாக காட்சியளிப்பார்கள்.

இந்த திருக்கோவிலின் பூசாரியான சதீஷ்குமார் ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருநாளின் பொழுதும் ஆடி தை வெள்ளிக்கிழமைகளில் பொழுதும் மார்கழி மாதத்தின் பொழுதும் அம்பாளுக்கு மிகவும் சிறப்பாக அற்புதமாக அலங்காரம் செய்து அம்பாளுக்கு நெய்வேத்தியங்களை படைத்து வருகின்றார்.

மிகவும் ஏழ்மையான நிலையில் அவர் இருந்தாலும் பக்தியோடும் அணுசரணையோடும் அம்பாளுக்கு அவர் செய்யும் தெய்வீகத் தொண்டில் அன்பர்கள் பக்தர்கள் அனைவரும் கரம் கொடுத்து உதவுவதன் மூலமாக ஒரு சிறிய கோவிலுக்கு நம்மால் இயன்ற பொருள் உதவி தருவதன் மூலமாக அம்பாளின் அருளை பெறுமாறு உங்கள் அனைவரையும் நியூ திருச்சி டைம்ஸ் மனதார வேண்டுகிறது.
