பொய்யர் களுக்கு துணை போகும் டுபாக்கூர் ஊடகங்கள் – பாஜக ஆன்மீக பிரிவு துணைத்தலைவர் தாக்கு

தமிழ் மாநில யாதவ மகாசபை சார்பில் அதன் நிறுவனர் ஸ்ரீரங்கம் மு.திருவேங்கடம் யாதவ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பால் வளத்துறை அமைச்சரும்
ஒட்டுமொத்த யாதவ சமுதாயத்தின் பாதுகாவலரும், சமுதாயத்தின் அடையாளமாக, கலங்கரை விளக்கமாக விளங்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ் ராஜகண்ணப் பன் அவர்களைப் பற்றி
உண்மைக்கும் புறம்பான செய்திகளை பொது ஊடகங்களிடம் கூறி அமைச்சருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் கெட்ட பெயர் வாங்கித்தர முயலும் கைக்கூலி அடிமைகளை வைத்து அக்கப்போர் இயக்கம் நடத்தும் ஜெயராமனையும் அவ்வப்போது நானும் உயிரோடு இருக்கிறேன்
என காண்பிக்கும் பிராடு பாண்டியனை யும் ,கடுமையாக எச்சரிக்கின்றோம்

மேலும் இந்த பொய்யர்களுக்கு துணை போகின்ற டுபாக்கூர் யூடியூப் மற்றும் சேட்டிலைட் ஊடகங்களையும் கடுமையாக கண்டிக்கின்றோம்

தொடர்ந்து பொது மக்களுக்காகவும் அவர்களின் சந்ததிகளின் நலனுக்காகவும் பாடுபட்டு உழைக்கும் அமைச்சர் திரு ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் அவர்களின் மனதைக் காயப்படுத்த யாரிடம் கைநீட்டினீர்கள் !? அறப்போர் இயக்கமே

பத்திரிகையாளர்களை சந்திக்கும குற்றச்சாட்டு சொல்லும் விசயம் உண்மையா அல்லது இட்டு கட்டப்படுவதா என்பதை அறிய , காவல்துறை நீதிமன்றம் என முறைப்படி போகாமல் வெற்று பப்ளிசிட்டிக்காக
பத்திரிகை மற்றும்  ஊடகங்களை அழைத்து சீன் போட்டது ஏன் ?

நீங்கள் யார் பேச்சைக் கேட்டு இந்த அவதூறு செயலில் இறங்கினீர்கள்!?

பத்திரிகைகளும் ஊடகங்களும் அமைச்சரின் அல்லது அவரது மகன்களிடம் கருத்து கேட்காமல் செய்தியை வெளியிட்டது தவறு

நிச்சயமாக அத்தனை ஊடகங்களும் சட்டத்திற்கு முன் கைகட்டி நின்றாகவேண்டும் மறந்துவிடாதீர்கள்
ஆவணங்கள் அனைத்தும் பொறுமயாக சரிபார்க்கப்பட்டு முறையாக பத்திரம் செய்யப்பட்டுள்ளது என கூறும் அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் சட்டம் படித்தவர் உங்களைப்போல் அசடோ கசடோ கிடையாது. எனவே அவர் வைத்துள்ள கெடுவிற்குள் பொது இடத்தில் மன்னிப்பு கேட்கவேண்டும்.
இல்லையெனில் களி திங்க தயாராகுங்கள்

யாதவர் சமுதாயத்தையும், அமைச்சர் திரு. ராஜ கண்ணப்பனையும் அழிக்க ஒழிக்க முயல்வோர் எவராயினும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தண்டனையில் இருந்து தப்ப்பிக்கவே முடியாது

இவ்வாறு தமது கண்டன அறிக்கையில் எம்.திருவேங்கடம் யாதவ் கூறியுள்ளார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *