
திருச்சி மாநகராட்சி, சாலைகளில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள பொருட்கள், வாகனங்கள் காவல்துறை மற்றும் மாநகராட்சி மூலம் அகற்ற திருச்சி மாநகராட்சி ஆணையாளர் சரவணன் ஆணைபடி, மத்திய பேருந்து நிலையம், ரொனால்ட்ஸ் ரோடு, ராயல் ரோடு, வில்லியம்ஸ் ரோடு, வார்னஸ்ரோடு, ஸ்டேட் வங்கி சாலை, ஹீபர் சாலை, ராக்கின்ஸ் ரோடு, பாரதியார் சாலை மற்றும் ஜங்ஷன் பகுதிகளில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளன.

அதில் குறிப்பாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் நுழைவுப் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை நிறுத்தி பொது மக்களுக்கு இடையூறு செய்து வருகின்றனர்.
பொதுமக்களுக்கு இடையூறாக இருசக்கர வாகனங்களை நிறுத்தி உள்ள இடத்திற்கு அருகில் புறக்காவல் நிலையம் இருந்தும் காவல்துறையினை கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்.

மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நுழைவுப் பகுதியில் உள்ள இருசக்கர வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்