

தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக இருப்பவர் திரு.வெ.மகேந்திரகுமார், மாநில பொதுச் செயலாளர் திரு.ஆ.பிரபு மற்றும் மாநிலப் பொருளாளர் திரு.சு.கார்த்திகேயன் ஆகியோர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் திரு கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து தி.மு.க. கட்சி கொடியுடன் வாழ்த்து பேனர் வைத்தது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு நில அளவைத் துறையில் உள்ள இரண்டு சங்கங்களில் தங்களது சங்கம் அரசுக்கு ஆதரவாக இருப்பதைப் போன்று ஒரு பிம்பத்தை காட்டுவதற்காக பொது மக்களின் வரிப் பணத்தில் இருந்து சம்பளம் வாங்கும் அரசு ஊழியர் என்பதை மறந்து விட்டு தி.மு.க.வின் மாநில நிர்வாகிகள் போன்று தி.மு.க. கொடியோடு வாழ்த்து பேனர் வைத்தது தொடர்பாக தமிழக அரசின் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் திரு.மதுசூதன் ரெட்டி I.A.S . அவர்களிடம் சமூக ஆர்வலர் ஒருவர் ஆதார ஆவணங்களுடன் விரிவான புகார் மனு கொடுத்திருந்தார்.
இந்நிலையில் நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநர் அவர்களின் கடித எண்.ந.க.ண2-18987-2024 படி விசாரணை நடைபெற்று வருவதாகவும் விரைவில் அரசு ஊழியர்கள் அரசியலில் ஈடுபடுவதை முற்றிலும் தடுக்கும் வண்ணமாக அரசாணை வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.