
அறநிலையத்துறை அமைச்சரின் உத்தரவை காற்றில் பறக்க விட்ட கல்யாணி
2 கோடிக்கு மேல் அறநிலையத்துறைக்கு வருவாய் இழப்பு & அல்லல்படு மக்கள்

மக்களின் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். மன்னன் எவ்வழியோ அமைச்சர்களும் அவ்வழியே என்பதற்கேற்ப அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்களும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நல்ல பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

அறநிலையத்துறையின் திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி அவர்கள் அறநிலையத்துறை அமைச்சர் நேரில் போட்ட உத்தரவை காற்றில் பறக்க விட்டு விட்டார்கள்.
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறையில் யாரெல்லாம் பணம் கட்ட ரெடியா இருக்காங்களோ அவங்களுக்கெல்லாம் உடனே வாடகை ரசீது போட்டு தரணும் நேரடியாக சொல்லிட்டு போனாரு சேகர்பாபு . ஆனா இவங்க கண்டுக்கவே இல்லை. இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இணை ஆணையர் கல்யாணி , அங்க இருக்க மக்களை எப்படியும் காலி பண்ணனும்னு கங்கணம் கட்டிக்கிட்டு இருப்பதாக கேள்வி.
மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழியே என்பதற்கேற்ப அறநிலையத்துறையில் பல நல்ல அதிகாரிகள் இருந்தாலும் அனைவருக்கும் களங்கம் விளைவிப்பது போல் செயல்பட்டு வருகிறார் திருப்பராய்த்துறை திருக்கோயில் செயல் அலுவலர் ராகிணி. இது எல்லோருக்கும் தெரிந்ததே.
ராகிணி யின் சில பராக்கிரம சாதனைகள்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை சிவன் கோயிலின் செயல் அலுவலர் ராகிணி அவர்கள், சிவனடியார்களுக்கு உழவாரப்பணி செய்ய தடை விதிப்பார், இவர் எம்எல்ஏ வை கண்டு கொள்ள மாட்டார், திருக்கோயிலில் பெயர் பலகை வைப்பதற்கு அனுமதி தர மாட்டார், கும்பாபிஷேகம் நடத்துவதற்கு அனுமதி தர மாட்டார், ராகிணி ரிஜிஸ்டர் போஸ்ட்களை பெற மறுப்பார் & திருப்பி அனுப்பி விடுவார், உயர்நீதிமன்ற கோர்ட்டு உத்தரவை மதிக்க மாட்டார் அதை நடைமுறைப்படுத்த மாட்டார். இன்னும் இவரது சாதனைகளை சொல்லிக் கொண்டே செல்லலாம். மிகவும் தைரியசாலி ஏனென்றால் கேட்பதற்கு யாரும் இல்லை, அம்மா கல்யாணியின் செல்லப்பிள்ளை ராகிணி.
அறநிலையத்துறைக்கு கோடியில் நஷ்டம் வருவாய் இழப்பு
15 வருடங்களுக்கு முன்னால் திருச்சி கரூர் சாலைதேசிய நெடுஞ்சாலை ஆக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்பட்ட போது
திருப்பராய்த்துறையில் ரோடு ஓரத்தில் இருந்த மக்களுக்காக அன்றைய தொட்டியம் எம்எல்ஏ ராஜசேகர் போராடி மக்களை திருக்கோயில் இடத்தில் குடியமர்த்தினார். இதில் மொத்தம் கிட்டத்தட்ட 150 குடும்பத்தினர் உள்ளனர். நம்மால் ஒரு மணி நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது ஆனால் இந்த இடத்தில் வாழும் மக்கள் கடந்த 15 வருடங்களாக எந்த ஒரு அடிப்படை வசதியும் இன்றி மின்சாரம், குடிநீர், தெரு விளக்கு, சுகாதாரம், கழிப்பறை வசதியின்றி வாழ்ந்து வருகின்றனர்.
இதில் தற்பொழுது கோர்ட்டுக்கு சென்று 17 பேர் மட்டும் மிகுந்த போராட்டத்திற்கு பின்னர் அடிப்படை வாடகை ரசீது, பத்து நாட்களுக்கு முன்னால் கட்டியுள்ளார்கள். மீதமுள்ள 140 நபர்களுக்கும் அடிமனை வாடகை ரசீது போட்டால் கிட்டத்தட்ட டெபாசிட் மட்டும் 2 கோடியே 80 லட்ச ரூபாய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. மாத வருமானம் 2 லட்சத்திற்கு குறையாமல் வரும்.
ராகினி இன்றைய தேதியில் கள ஆய்வு செய்யாமல் ஏனோ தானோ என்று ஏதோ ஒரு 35 நபர்களுக்கு அடிமனை வாடகை ரசீது போடுவதற்கு முயற்சி செய்து வருகிறார். மேலும் திருக்கோயில் இடத்தின் கணிசமான பகுதியை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனியார் அறக்கட்டளை இடமிருந்து வாடகை வசூலிப்பதற்கான எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், தனியார் அறக்கட்டளைக்கு சாதகமாக செயல்படுகிறார், மக்கள் கேட்டால் அவர்கள் கோயில் நிலத்திற்கு அருகில் உள்ளார்கள் என பதில் அளிக்கிறார்.
ராகிணி 10 நாட்கள் மருத்துவ விடுப்பில் சென்று இருந்தார்கள். அப்போது கூடுதல் பொறுப்பு வகித்த செயல் அலுவலர் அகிலா அவர்கள் நடமாடும் தெய்வமாக அகிலாண்டேஸ்வரி ஆக மாறி கோர்ட்டு உத்தரவை நிறைவேற்றி, அடிமனை வாடகை ரசீது போட்டுக் கொடுத்து 17 மக்களின் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்தார், அடிப்படை வசதிகளுக்கான தடையில்லா சான்றிதழ் வழங்கினார். தைரியமாக தனியார் அறக்கட்டளையும் திருக்கோயில் நிலத்தில் தான் உள்ளது அவர்களும் ஆக்கிரமிப்பு தாரர்கள் தான் என எழுத்துப்பூர்வமாக உலகுக்கு தெரிவித்தார்.
பணி இடை நீக்கம் செய்யப்பட்டார் திருக்கோயில் செயல் அலுவலர்
அன்னதானத்தில் அழுகிய கொத்தமல்லி இலை வந்தது என்று மிகவும் சிறப்பாக செயல்படும் ஒரு செயல் அலுவலரை பணி இடைநீக்கம் செய்த கல்யாணி. ஏன் அறநிலையத்துறைக்கு கோடியில் வருவாயிழப்பு ஏற்படுத்தும் , அறநிலையத்துறைக்கும் மக்களுக்கும் இடைஞ்சலாக செயல்படும் ராகிணியின் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார் என்பதுதான் அனைத்து செயல் அலுவலர்கள் , அறநிலையத்துறை பணியாளர்கள், சிவனடியார்கள், ஆன்மீகவாதிகள் மற்றும் மக்களின் கேள்வியாகவும் உள்ளது.