

திருச்சியில் மனை வாங்குவோர், பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வருவாய்துறையை அணுகுகின்றனர்.
பொதுவாக அசல் ஆவணத்தை ஸ்கேன் செய்து ஆன்லைனில் பதிவற்றம் செய்து பெறப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் உட்பிரிவு தேவைப்படும் நிலங்களை சர்வேயர் அளந்து அளிக்கும் அறிக்கை அடிப்படையில், புதிய உட்பிரிவுகளை ஏற்படுத்தி 30 நாட்களுக்குள் பட்டாவில் பெயர் மாற்றப்படும்.
ஆனால், திருச்சியில் உள்ள திருச்சி கிழக்கு வட்டாட்சியர் அலுவலக சர்வேயர்களிடம் உட்பிரிவு பட்டா தொடர்பாக அணுகும் போது வட்டாட்சியர் சக்திவேல் முருகனுக்கு சிறப்பு கவனிப்பு செய்தால் மட்டுமே தான் பட்டா வழங்க முடியும் என பொது மக்களை, தொடர்ந்து அலைய வைப்பதாகவும், உரிய ‘கவனிப்பு’ இல்லாத விண்ணப்பங்கள், பல மாதங்களாக கிடப்பில் வைத்து பட்டாவில் ஏற்கனவே உள்ள பெயருக்கு மாற்றம் செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஏற்கனவே பட்டா மாறுதல் மனுக்களில் தள்ளுபடி சதவீதத்தை குறைக்கவும், நிலுவை இனங்களை குறைத்து, விரைவாக பட்டா வழங்க வேண்டும் எனவும், உட்பிரிவு பட்டா மாறுதல் 30 நாட்களுக்குள்ளும், உட்பிரிவு அற்ற பட்டா மாறுதல் 15 நாட்களுக்குள்ளும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நில அளவை மற்றும் நில வரித்திட்டம் இயக்குனர் திரு.மதுசூதன்ரெட்டி I.A.S. அவர்கள் அறிவுறுத்தியும் திருச்சி கிழக்கு வட்டத்தில் பத்துக்கு மேற்பட்ட சர்வேயர்கள் பணி செய்தும், 30-க்கும் மேற்பட்ட உட்பிரிவு பட்டா மாற்றம் மனுக்கள் கையொப்பம் செய்யப்படாமல் வட்டாட்சியரிடம் கிடப்பில் இருப்பதாகவும் , ஒவ்வொரு சர்வேயரும் மாதத்திற்கு குறைந்தபட்சம் 50 உட்பிரிவு மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்த போதிலும் திருச்சி கிழக்கு வட்டத்தில் மிக குறைந்த அளவிலே மட்டுமே உட்பிரிவு பட்டா பெயர் மாற்றங்கள் செய்யப்படுவதாக புகார் தெரிவிக்கின்றனர்.
பல மாதங்களாக நிலுவையில் உள்ள மனுக்களை மனுக்களுக்கு பட்டா வழங்கிடவும் லஞ்சம் கொடுத்தால் தான் பட்டா வழங்குவேன் என்று அடம் பிடிக்கும் திருச்சி கிழக்கு வட்ட ஊழியர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடவடிக்கை எடுப்பார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.