
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டத்திற்கு உட்பட்ட கீதாபுரம் மங்கம்மா நகர் ராயர் தோப்பு என பல பகுதிகளில் கடந்த 30 நாட்களுக்கு மேலாக குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் விரிசல் ஏற்பட்டு நிலத்தடி நீருடன் கலந்ததாக ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது பற்றி கீதாபுரம் குடியிருப்பு வாசிகளிடம் கேட்ட பொழுது கடந்த ஒரு மாதமாகவே குடிதண்ணீர் துர்நாற்றத்துடன் அசுத்தமாக வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் மூலம் குழாய்கள் பதிக்கப்படும் போதே இந்த பிரச்சனை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடை நீருடன் நிலத்தடி நீரும் கலந்ததால் தண்ணீரை பயன்படுத்தும் பொழுது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக தண்ணீர் துர்நாற்றத்துடன் வருவதாக புகார் தெரிவிக்கின்றனர். இது பற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.