

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறை அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமத்தில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த மக்கள் ஒருவித வனவாசத்தை அனுபவித்து வந்தார்கள்.

முறையான குடிநீர் வசதியோ மின்சார வசதியோ இல்லாமல் தனித்து விடப்பட்ட அகதிகளைப் போல அவர்கள் ஒரு துன்பமயமான வாழ்க்கை வாழ்ந்து வந்தார்கள்.
இதை முதன் முதலாக நமது நியூ திருச்சி டைம்ஸ் செய்தியாக வெளியிட்டது.
அதைத் தொடர்ந்து மற்ற ஊடகங்களும் அந்த நந்தவனம் கிராமத்தில் அவர்களின் இன்னல்களை படம்பிடித்து செய்தியாக உலகறிய செய்தது.
அதன் பயனாகவும் தமிழ்நாடு முதலமைச்சரின் கருணை பார்வையினாலும் இன்று அந்த தாருகாவணேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நந்தவனம் கிராமம் உள்ளடக்கிய பகுதியில் அம்பேத்கர் நகர் என அழைக்கப்படுகின்ற ஒரு பிரிவினருக்கு மட்டும் புது விடியல் கிடைத்திருக்கின்றது.
அதை அவர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்றார்கள்.
இந்த மகிழ்ச்சி நந்தவனம் கிராமத்தில் இதே துயரை அனுபவித்து வரும் மக்களுக்கும் கிடைக்க மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் தாயுள்ளத்தோடு கருணை காட்ட வேண்டும் என்பதே நியூ திருச்சி டைம்ஸ் ன் கோரிக்கை.
❤️ 15 வருஷம் வனவாசம் முடிவுக்கு வந்துவிட்டது 🙏
💥💯 எங்களுக்கு வீட்டு வரி ரசீது வழங்கப்பட்டு விட்டது
முதல்வரின் முகவரித் துறைக்கு நன்றி
மாண்புமிகு தமிழக முதல்வருக்கும் திரு ஸ்டாலின் ஐயா அவர்களுக்கும்,
அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்களுக்கும்,
நம் தொகுதி எம்எல்ஏ அண்ணன் திருபழனிஆண்டி அவர்களுக்கு,
வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி சகுந்தலா அவர்களுக்கு,
பஞ்சாயத்து செயல அலுவலர் திரு சேகர் அவர்களுக்கும்,
கணிப்பொறி உதவியாளர்
திருமதி நந்தினி அவர்களுக்கும் நன்றி.
எங்களுடன் கடைசி வரை பயணித்து தற்காலிகமாக அஞ்சு லட்சத்து 22 ஆயிரம் கொடுத்து ₹5,22,000 அனைத்தையும் முடித்துக் கொடுத்த சிவசிவா அவர்களுக்கு நன்றிகள்.
உதவி புரிந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி
இப்படிக்கு தாழ்மையுடன்
எஸ் ராதாகிருஷ்ணன் தலைவர்
அருள்மிகு தாருகாவனேஸ்வரர் திருக்கோயில் , அடிமனை வாடகைதாரர் நல சங்கம், திருப்பராய்த்துறை – 639 115, திருச்சி மாவட்டம்
Mobile No – 9655362879