
திருச்சி மாநகரம் கே கே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் சைபர் க்ரைம் குற்றங்கள் போதைப் பொருள் தடுப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர்
அழகு சுப்பிரமணியன் தலைமையில் 17.02.25 நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் முனைவர் பிரபு சியாமளா பவுலின் சோபியா ராணி ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பில் மாணவர்களின் பங்கு

போதைப்பொருள் குழந்தைகள் பயன்படுத்துவதால் உடல், மன அளவில் ஏற்படும் பாதிப்புகள் சமுதாயம் சார்ந்த பிரச்சினைகள் குறித்தும் இணைய வழியினால் ஏற்படக்கூடிய சைபர் க்ரைம் குற்றங்கள் குழந்தை நலக்குழுவின் பணிகள் செயல்பாடுகள் குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி எண் 10 9 8 குறித்தும் கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் லதா கல்வியின் அவசியம் குழந்தை திருமண தடுப்பு பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்தல் குறித்தும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் லதா பாலின சமத்துவம் குழந்தை உரிமை மனித உரிமையே குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். உதவி தலைமை ஆசிரியர்கள் செல்வம் வரவேற்புரை ஆற்றினார் சங்கீதா நன்றி கூறினார் நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்துக் கொண்டனர்.
