

ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர்களுக்கு
திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி முடிகண்டம் பஞ்சாயத்திற்குட்பட்ட ஓலையூர் கிராமத்தில் உள்ளது காசாரி பெரியகுளம். இந்த குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கடைகள், வீடுகள் கட்டி உள்ளனர். இரண்டொரு மாதத்திற்கு முன்பு குளத்தில் வீடு கட்டுவது தொடர்பாக BDO அவர்களிடம் புகார் சென்றது. அச்சமயம் வீட்டு பணியை நிறுத்திவிட்டர் BDO அவர்கள். இருவாரம் கழித்து சம்பந்தபட்ட BDO வை சரிகட்டி மீண்டும் வீடு கட்டும் பணியை செய்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை வட்டாட்சியர்கு தகவல் கொடுத்தும் இதுவரை அவரும் நடவடிக்கை எடுக்கவில்லை .
ஆறு, வாய்க்கால், குளம் போன்ற நீர் நிலை ஆக்கிரமிப்பு குறித்து தமிழக அரசும் , மாண்பமை நீதிமன்றங்களும் பல முறை பல உத்தரவுகள் இட்டும், கண்டனங்களையும் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்ற வேளையில் தொடர்ச்சியாக சில அரசு அதிகரிகள், ஊழியர்களை கைக்குள் போட்டு கொண்டு இது போன்ற ஆக்கிரமிப்புகள் தொடர்கதையாகி வருகிறது.
ஆதலால் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோர்கள் மேற்கண்ட ஓலையூர் பெரியகுளத்தை ஆய்வு செய்தும், அளவீடு செய்தும் குளத்தில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றி குளத்தை மீட்டு தர கோரிக்கை எழுந்துள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியோர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.