

18 மாதங்களில் 11 கும்பாபிஷேகம் இந்து சமய அறநிலையத்துறை சாதனை
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்த நல்லூர் வட தீர்த்த நாதர் கோயில் மண்டபம் மின்சார கசிவு காரணமாக ஆண்டு 09 – 09 – 2018ல் தீ பிடித்தது சேதமடைந்தது. தற்பொழுது அந்தக் கோயிலை சீரமைக்கும் பணி மற்றும் குடமுழுக்கு பணி ஆணையர் பொது நிதியிலிருந்து 32 லட்சம் ரூபாய் ஒதுக்கி செய்யப்பட்டு வருகிறது. திருப்பணிகளை முன்னின்று திறம்பட துரிதமாக செய்து வருகிறார் மக்களால் நடமாடும் அகிலாண்டேஸ்வரி என அழைக்கப்படும், செயல அலுவலர் அகிலா, இவர்கள் நிறைய குடமுழுக்கு செய்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. *கடந்த 18 மாதங்களில் 11 கும்பாபிஷேகம் நடத்தி இருக்கிறார். காவிரி ஆற்றின் *தென்கரையில் எட்டு வடகரையில் மூன்று,* மொத்தம் பதினோரு கும்பாபிஷேகங்கள் செய்துள்ளார்.

அந்தநல்லூர் வட தீர்த்தேசுவரர் கோயில் திருச்சி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருச்சி கரூர் சாலையில் ஜீயபுரத்தை அடுத்து திருச்செந்துறை உள்ளது. அதனை அடுத்து 1 கிமீ தொலைவில் உள்ள அந்தநல்லூரில் இக்கோயில் உள்ளது. காவிரி ஆற்றின் தென்கரையில் உள்ள 128 பாடல் பெற்ற சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். காவிரி தென் கரைத் தலமாகும். ஆலந்துறை இன்று “அந்தநல்லூர்” என்ற நாமத்தால் விளங்குகின்றது. காலம் 9 ஆம் நூற்றாண்டு, பராந்தக சோழன் காலத்திய கற்றளியாக இக்கோயிலின் திருச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், கஜலட்சுமி, நவக்கிரகம், பைரவர், சூரியன், சந்திரன் சன்னதிகள் உள்ளன. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். மேலும் விவரங்களுக்கு அந்தநல்லூர் வட தீர்த்த நாதர் திருக்கோயில் செயல் அலுவலர் – 6369683495 , அர்ச்சகர் நடராஜ பிச்சைமணி ஐயர் – 6383877547.

செயல் அலுவலர் அகிலா கட்டுப்பாட்டில் திருச்சி வான பட்டறை மாரியம்மன் கோயிலில் இருந்து அந்தநல்லூர் வட தீர்த்த நாதர் சுவாமி கோயில் வரை உள்ளது & பழுர் நவகிரக ஸ்தலம்.* இவர் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கு பாழடைந்து இருக்கின்ற கோயில்களுக்கு கும்பாபிஷேகம் செய்து விடுவார். நேர்மையாக செயல்படுபவர் அறநிலையத்துறைக்கு வருமானத்தை அதிகமாக்குபவர்.
திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் திருக்கோயிலில் கூடுதல் பொறுப்பு வகித்த பொழுது 15வருட பிரச்னையை கூடுதல் பொறுப்பு வகித்த 15 நாட்களில் தீர்த்தார். ஐந்து பிக்ஸர் டெபாசிட் கிரியேட் செய்தார். தீர்க்க முடியாத பிரச்சினையாக்கப்பட்ட கோர்ட் ஆர்டர் இருந்தும் நிறைவேற்றப்படாமல் இருந்த அம்பேத்கர் நகரில் வாழும் மக்களுக்கு அடிமனை வாடகை பணம் வசூல் செய்து அறநிலையத்துறைக்கு கிட்டத்தட்ட 25லட்சம் ரூபாய் வருமானம் ஏற்படுத்திக் கொடுத்தார். திருப்பராய்த்துறையில் உள்ள தனியார் அறக்கட்டளை நிறுவனம் கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது என்று தைரியமாக எழுதிக் கொடுத்தார்.
அந்தநல்லூர் வட தீர்த்தங்கநாதர் கோயில் சென்றால் கோயிலில் இன்று திருப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் அவற்றை பார்க்கும் பொழுது நிச்சயமாக அசந்து விடுவீர்கள், முழுவதுமாக எல்லாவற்றையும் இடித்து தீயின் காரணமாக எரிந்து போன கற்களை மாற்றி புது கோயிலை கட்டிக் கொண்டிருக்கிறார்கள் அறநிலையத்துறை அதிகாரிகள் என்று தான் சொல்ல வேண்டும். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்தநல்லூர் வட தீர்த்தேசுவரர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் எதிர்பார்க்கப்பட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிக்கப்படும் நிலையில் உள்ளது. பக்தர்களும் சிவனடியார்களும் ஆன்மீக நண்பர்களும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு , திருச்சி மண்டல இணை ஆணையர் கல்யாணி, திருக்கோயில் செயல் அலுவலர் அகிலா அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.