
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் வார்டு குழு 1 ல் வரும் TVKoil வார்டு 5 ல் வரும் மேல விபூதி பிரகாரம் பார்த்தசாரதி ரெங்க பவன் ஹோட்டல் வாசலில் மாநகராட்சி பாதாள சாக்கடை மேன்ஹோல் வழிந்து அந்த பகுதியில் செல்லும் மக்களை முகச் சுழித்து கழிவுநீரை மிதித்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இங்கு சாப்பிட வரும் மக்களுக்கு இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை சீர் செய்ய உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் நிரந்தரமாக வழிமுறைகளை எடுக்க வேண்டும் என இதன் மூலம் தாழ்மையுடன் மாநகராட்சியை கேட்டுக் கொள்கிறோம்.
இது போன்று ஸ்ரீரங்கம் TV Koil பகுதிகளில் பல இடங்களில் பாதாள சாக்கடை உடைப்பு ஏற்பட காரணம் மாநகராட்சி நிர்வாகம் மட்டும் அல்ல – பொதுமக்களாகிய நாமும் தான் பாதாள சாக்கடையில் நாம் கழிவு நீரைத்தவிர பிளாஸ்டிக் குப்பைகள் – மீதி உள்ள உணவு பொருட்களையும் இதில் கலந்து கொட்டி வருவதும் – அது அந்தந்த பகுதியில் அடைப்பு ஏற்பட்டு வெளியே வழிந்து மக்களுக்கு தொல்லை கொடுப்பதும் வழக்கமாக உள்ளது. எனவே நாமும் இது போன்ற செயல்களை நிறுத்தி நம்பகுதி தூய்மையாக இருக்க ஒத்துழைப்பு கொடுப்போம்.
என்றும் பொது நலச் சேவையில் – ஸ்ரீரங்கம் மக்கள் நலச் சங்கம். பொது நலன் கருதி – TV Koil – கொண்டையன்பேட்டை – K.பன்னீர்செல்வம் – துணைத்தலைவர்.