

முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் அவர்களின் துணைவியார் திருமதி.சரோஜாதேவி அவர்கள் மறைவை தொடர்ந்து அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் நிறுவனர் TTV தினகரன் இன்று காலை திருச்சி மரக்கடை அருகில் உள்ள வெல்லமண்டி நடராஜன் இல்லத்திற்கு சென்று அவருக்கு ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அவர் கூறியதாவது…..
எடப்பாடி பழனிச்சாமி அதிமுக வை பலவீனமாக்குகிறார். அவருக்கு முதல்வரைக்கண்டு பயம் அதனால்தான் எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக உள்ளார் என்று கூறினார்.

மும்மொழிக்கொள்கை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர் மாணவர்கள் மூன்றாவதாக ஒரு பிராந்திய மொழியை கற்றுக்கொள்வதில் தவறில்லை எனவும் தமிழக அரசியல் தலைவர்கள் வேண்டுமென்றே சுயநலத்தோடு இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் தமிழகத்தின் சட்டம்ஒழுங்கு பிரச்சனையையும் அரசின் நிர்வாகத்திறன் இன்மையையும் மூடி மறைக்க துணை நிற்கிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மேலும் தமிழகத்திற்கு சேர வேண்டிய கல்வி நிதியை முதல்வர் கேட்டால் பாரதப்பிரதமர் தாயுள்ளத்தோடு வழங்கி விடுவார் எனவும் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின் போது தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், வடக்கு மாவட்ட செயலாளர் தொட்டியம் ராஜசேகர், அவைத்தலைவர் ராமலிங்கம், ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் மலைக்கோட்டை கமருதீன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தரண், கைலாஸ் ராகவேந்திரா, நாகூர் மீரான் மற்றும் நிர்வாகிகள் தண்டபாணி, ஜான் கென்னடி, கல்லணை குணா உட்பட முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் உடனிருந்தனர்.