பொய் குற்றச்சாட்டில் இருந்து மீண்ட பாரம்பரிய உணவு உற்பத்தி நிறுவனம்

கோவை,
கோவை மயில் மார்க் சம்பா ரவை நிறுவன பங்குதாரர்கள் செந்தில் குமார், பாலசுப்பிரமணியன், பொன்முருகன், தமிழக வியாபாரிகள் சம்மேளன ரங்கே கவுடர் வீதி தலைவர் மணி ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.


அப்போது அவர்கள் கூறும் போது, கோவை ரங்கே கவுடர் வீதியில் 60 வருட பாரம்பரியமிக்க ஒரு நிறுவனமாக எங்களுடைய மயில் மார்க் சம்பா ரவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது.


சம்பா ரவை என்பது தமிழக மக்களின் அன்றாட உணவு முறையில் உள்ள ஒரு விஷயம். இதில் எங்கள் மயில் மார்க் சம்பா ரவையின் நற்பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மயில் மார்க் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியை கிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் புகார்களை நாங்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம்.
மயில் மார்க் சம்பா ரவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டது என ஒரு பொய்யான வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்தில் கோவை தொப்பம்பட்டியை சேர்ந்த ரவிகாந்த் என்பவன் கடந்த ஆண்டு தாக்கல் செய்திருந்தான் .

இதை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மயில் மார்க் சம்பா ரவை உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சம்பா ரவை தயாரிப்புகளை உணவு பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைத்தனர். அதில் மயில் மார்க் சம்பா ரவையில் எந்தவிதமான வேதிப்பொருள், பூச்சிக்கொல்லி மருந்தோ கலக்கவில்லை என சோதனை அறிக்கை வந்தது.

இந்த அறிக்கையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் .மேலும் பொய்யான வழக்கை தாக்கல் செய்த ரவிகாந்த் என்பவனின் முகவரிக்கு விசாரணைக்கு நேரில் வருமாறு உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பலமுறை சம்மன் அனுப்பினர். ஆனால் ரவிகாந்த் நேரில் ஆஜராகவில்லை.

கடந்த மாதம் 7 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்னிலையில் வந்தது .வழக்கை விசாரித்த நீதிபதி மயில் மார்க் சம்பா ரவை நிறுவனத்தின் மீது போடப்பட்ட பொய் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.


உத்தரவில் மயில் மார்க் சம்பா ரவை மீது போடப்பட்டது ஒரு புனையப்பட்ட பொய் வழக்கு என்றும் உத்தரவிட்டுள்ளார்.மேலும் வழக்கு தாக்கல் செய்த ரவி காந்த் ஒரு தனியார் ஆய்வக அதிகாரியிடம் மிரட்டி பொய்யான மதிப்பீட்டை பெற்று அதை கோர்ட்டில் தாக்கல் செய்து உள்ளான். இதற்கு பின்புலமாக கோவையில் உள்ள தனியார் நிறுவன உரிமையாளர் உள்ளார் என்பது நாங்கள் பெற்ற தகவல்படி தெரியவந்தது.
மேலும் மயில் மார்க் சம்பா ரவை குறித்து கடந்த மாதத்தில் அவதூறு வீடியோவை வாட்ஸ்அப்பில் சிலர் பரப்பினர். இது குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தோம். இந்த வீடியோவை ஏற்கனவே வழக்கு தொடர்ந்த ரவிகாந்த் தான் பரப்பி வருகிறான் என்று புகார் அளித்து இருந்தோம். இது குறித்து விசாரணைக்கு நேரில் கடந்த 22 ஆம் தேதி ஆஜராகுமாறு ரவி காந்த்திற்கு கோவை கடை வீதி போலீசாரும், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரும் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அன்றைய தேதியில் ரவி காந்த் நேரில் வந்துவிட்டு விசாரணைக்கு ஆஜராகாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி சென்றான். அவனது வழக்கறிஞர் என கூறிகொண்டு வந்த நெடுஞ்செழியன் என்பவர் மட்டும் இரண்டு போலீஸ் ஸ்டேஷனில் சிறிது நேரம் இருந்துவிட்டு ரவி காந்த்தை அழைத்து கொண்டு வருவதாக கூறிவிட்டு சென்ற அவரும் இதுவரை வரவில்லை. இதிலிருந்து அவதூறு வீடியோவை பரவ விட்டது ரவி காந்த் என்பது தெளிவாக தெரிகிறது. இவனது பின்புலமாக செயல்பட்டவர் யார் என்பது விரைவில் வெளி உலகிற்கு வந்துவிடும். அதனால் தான் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகாமல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தப்பி சென்றுள்ளான். ரவிகாந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீண்டும் கோவை மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துள்ளோம்.
பொதுமக்களுக்கு நாங்கள் சொல்வது , தரத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படும் எங்கள் நிறுவன தயாரிப்புகள் அனைத்துமே அனைத்து வயதினரும் சாப்பிடும் விதத்தில் மிகவும் தரமான முறையில் தயாரிக்கப்படுகிறது என்பதை மீண்டும் அழுத்தமாக சொல்லி கொள்கிறோம்.
சம்பா ரவை என்பது தமிழக மக்களின் அன்றாட உணவு முறையில் உள்ள ஒரு விஷயம். இதில் எங்கள் பிராண்ட் பெயரை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மக்களிடம் சம்பா ரவை சாப்பிடும் மக்களிடம் பீதியை கிளப்பி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தொடர் புகார்களை நாங்கள் அளித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.
உடன் தமிழக வியாபாரிகள் சம்மேளன கடைவீதி செயலாளர் தியாகராஜன், மாயா சன்ஸ் உரிமையாளர் நரேஷ், பரமானந்தம் பிரதர்ஸ் நிறுவன உரிமையாளர் அருள் ஜேக்கப் ஆகியோர் உடன் இருந்தனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *