
திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் மற்றும் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு பணி பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இன்று 22.3.2025 ஆம் தேதி திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் பிப்ரவரி 2025 மாதத்திற்கான மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி இ.கா.ப அவர்கள் தலைமையில் நடைபெற்றது .

கூட்டத்தில் காவல் துணை ஆணையர்கள் திரு.பி.சிபின் இ.கா.ப (வடக்கு) திரு.டி.ஈஸ்வரன் தெற்கு காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததும் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை ஏதும் நடைபெற வண்ணம் தீவிரமாக கண்காணிப்பு செய்தும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மற்றும் கெட்ட நடத்தைக்காரர்களின் நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிக்கவும்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவும்
சாதி மற்றும் மதரீதியாக எழும் பிரச்சனைகளின் போது காவல் உயர் அதிகாரிகள் சம்பவ இடம் சென்று மோதல்களை தடுத்து உடனடியாக துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும்
மேலும் காவல் நிலையங்களில் பதிவாகி நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும்
காவல் நிலையங்கள் காவலர் குடியிருப்புகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும்
புகார் அளிக்க வரும் பொது மக்களிடம் கனிவாக நடந்து கொண்டும் அவர்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் முறையாக விசாரணை செய்தும் வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்யவும் இல்லையேல் புகார் மனுவிற்கு மனு ரசீது வழங்கி விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்கள்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி ந.காமினி இ.கா.ப அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்த நான்கு சக்கர வாகனம் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த அரியமங்கலம் காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினரையும் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்ட உறையூர் காவல் ஆய்வாளர் மற்றும் குழுவினரையும் நேரில் அழைத்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கியும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்கள்.