
கழகத் தலைவர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 72 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெறும் பொதுக்கூட்டம்.
தமிழக முதல்வரும் திராவிட முன்னேற்றக் கழகத்தலைவருமான
முகஸ்டாலின் அவர்களின் பிறந்தநாள் விழாவானது தமிழகம் முழுவதும் வெகு எழுச்சியாக கொண்டாடபட்டுவருகிறது

இந்நிலையில் திருச்சி தெற்குமாவட்ட கழகச் செயலாளரும் தமிழக பள்ளிகல்விதுறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களின் வழிகாட்டுதலின் பெயரில் திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேலும் இந்த பொதுக்கூட்டத்திற்கு வருகை புரிந்த அனைவரையும் ஒன்றிய துணைச் செயலாளர் சாந்தகுமார் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஜெகதீசன் ஆகியோர் வரவேற்றனர்
மேலும் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக
தலைமை கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர்.

மேலும் கூட்டத்தில் இறுதியில் மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கயல்விழி மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் முருகேசன் ஆகியோர்
நன்றி கூறினார்
மேலும் இந்த பொதுகூட்டத்தில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் மூக்கன் செங்குட்டுவன் மாவட்ட விவசாய அணி தலைவர் இலைந்தைபட்டி மாரிமுத்து,ஒன்றிய பொருளாளர் காந்தளூர் பாஸ்கர்,சுதாகர்,
சங்கர், ரெங்கர், சாந்தகுமார் உட்பட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மேலும் பொதுக்கூட்டத்தில் 700 க்கும் மேற்பட்ட மகளீருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
