பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திதிருச்சியில் வருகிற ஜூலை 13ந்தேதி சமுதாய மாநாடுஒருங்கிணைந்த வேளாளர், வெள்ளாள சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திருச்சி, மார்ச். 25 –

ஒருங்கிணைந்த வேளாளர் வெள்ளாள சங்கங்களின் கலந்துரையாடல் கூட்டம்.
திருச்சி தஞ்சை ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு சோழிய வேளாளர் சங்க மாநில தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அனைத்து வேளாளர் உட்பிரிவு சங்கத்தை சேர்த்த மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு:-
மத்திய அரசு எடுக்கும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் உள்ள வேளாளர் உட்பிரிவுகளை ஒருங்கிணைத்து வேளாளர் (வெள்ளாளர்) என்ற ஒரே பெயரின் கீழ் பதிவு செய்ய அரசாங்கத்திடம் கோரிக்கை தீர்மானிக்கப்படுகிறது.
அரசாங்க கெசட்டில் தற்பொழுது தனி தனியாக பதிவு செய்யப்பட்டுள்ள வேளாளர் உட்பிரிவுகளை, வேளாளர் (வெள்ளாளர்) என்ற பொது பெயரின் மாற்றி அரசாணை வெளியிட தமிழக அரசிடம் கோரிக்கை வைப்பது. வேளாளர்களுக்கு என்று தனி வேளாளர் நல வாரியம் அமைக்க தமிழக அரசை கேட்டுக்கொள்கிறது. நமது கோரிக்கைகளை மத்திய,மாநில அரசுகளிடம் வலியுறுத்த வருகிற ஜூலை 13. ந்தேதி அன்று அரசியல் சார்பற்ற வேளாளர் (வெள்ளாளர்) சமுதாய மாநாடு நடத்தவது என்று இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
மாநாட்டில் அனைத்து வேளாளர் (வெள்ளாளர்) உட்பிரிவு சங்ங்களும் அமைப்புகளும் அரசியல் சார்பற்று கலத்து கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.மாநாட்டு ஏற்பாடுகளை மேற்கொள்ள மண்டல வாரியாக சங்கஙகள்,
அமைப்புகள் பிரதிநிதிகளை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க தீர்மானிக்கப்படுகிறது.
மேற்கொண்டு மத்திய ,மாநில அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்னெடுத்து செல்லவும், அரசாங்கத்திடம் பேச்சு வார்த்தை நடத்தவும் குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில ஒருங்கிணைந்த வேளாளர்,
வெள்ளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசியல் சார்பற்ற சமுதாய அமைப்பாகவே தொடர்ந்து இயங்கும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும். சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில்,…

    மாடுபிடி வீரர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சொல்வது எப்படி சாத்தியமாகும்- ஜல்லிக்கட்டு ராஜேஷ்

    திருச்சி, ஜன.24  பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடைபெறும் கிராமங்களுக்கு கட்டாயமாக அரசாணை பிறப்பிக்க வேண்டும் – தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் ஒருங்கிணைப்பாளர் திருச்சியில் பேட்டி இன்று காலை தமிழர் வீர விளையாட்டு மீட்புக் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர்ஜல்லிக்கட்டு ராஜேஷ் செய்தியாளர்களுக்கு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *