
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டம், நகரளவை வார்டு N, பிளாக் 33, நகரளவை எண் 209/1,2 கட்டுப்பட்ட பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அருங்காட்சியகத்தில் இருந்த சுற்றுச்சுவரை இடித்து தள்ளிவிட்டு அத்துமீறி அரசு நிலத்தின் வழியாக எந்த வித உத்தரவும் பெறாமல் பொதுப் பாதையாக தனியார் வணிக நிறுவனத்தினர் பயன்படுத்திக் வருகின்றனர்.
மேற்படி நகர அளவை சர்வே எண்களில் அமைந்திருந்த வட்டாட்சியர் அலுவலகம் காவல்துறை அலுவலகம் உள்ளிட்ட பல அரசு அலுவலகங்கள் ஏற்கனவே காலி செய்யப்பட்டு நிலையில் அருங்காட்சியகம் மட்டும் செயல்பாட்டில் இருந்து வருகின்றது.
அரசு நிலத்தை சுற்றி வணிக நிறுவனங்கள் உரிய கட்டிட அனுமதிக்கு மாறுதலாகவும் மற்றும் முறைகேடாக அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும் கட்டிடங்கள் கட்டி வருகின்றன.
பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளின் துணையோடு தனியார் வணிக நிறுவனம் அரசு நிலத்தின் வழியாக அத்துமீறி நுழைந்து பொதுப் பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, பொதுப்பணித்துறை கட்டிட கோட்ட செயற்பொறியாளரும் மற்றும் திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட செயற் பொறியாளரின் நேரடி மேற்பார்வையில் நில அளவை நகர சார் ஆய்வாளரை கொண்டு அரசு நிலத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோதமாக அரசு நிலத்தில் பொது பாதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கடந்த இரு வருடங்களுக்கு முன் மலைக்கோட்டை பகுதி பாஜக அப்போதைய மண்டல் தலைவர் அரவிந்த் பிரகாஷ் தலைமையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர் என்பது குறிப்பிட தக்கது.