வாட்டும் வெயிலிலும் மக்கள் பணியில் தன்னை அர்ப்பணிக்கும் காவளர்களுக்குமோர் பழச்சாறு மற்றும் தொப்பி வழங்கிய மாநகர காவல் ஆணையர்.

திருச்சியில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கிவைக்கப்பட்ட போக்குவரத்து சீர்செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினருக்கு மோர் மற்றும் எலுமிச்சைப் பழச்சாறு வழங்கும் திட்டத்தின்கீழ், திருச்சிமாநகர காவல்துறையில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழச்சாறு வழங்கியும், வெயிலை தாங்கும் தொப்பிகளையும் போக்குவரத்து போலீஸாருக்கு வழங்கி மாநகர காவல் ஆணையர் காமினி தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்வில் திருச்சி மாநகர காவல் துணைஆணையர்கள் ஈஸ்வரன், சிபின் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.

மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 244 போக்குவரத்து காவலர்களுக்கு மோர், எலுமிச்சை பழச்சாறு வழங்கப்பட உள்ளது .

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    கல்வி என்பது விற்பனைப் பொருள் அல்ல… ஏழையின் கனவை விலைபேசி வாங்கும் சந்தைப் பொருளும் அல்ல!

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் திருப்பராய்த்துறை அரசு உதவி பெறும் பள்ளிகளில் இல்லையா? கல்வி வணிகமயமாக்கப்படுகிறதா?87 வயது முதியவரின் ரத்தக் கண்ணீர் மனு! “நான் இழந்த கல்வியை… என் ஊர் குழந்தைகள் இழக்கக் கூடாது!” ஜனாதிபதி, பிரதமர், முதலமைச்சர் நேரடியாக தலையிட வேண்டும்…

    உயிரைக் கொடுத்து… நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்கள்!செவி சாய்ப்பாரா தமிழக முதல்வர் விஜய் !உடனடி, அதிரடி நடவடிக்கை எடுப்பாரா?அமைச்சர் சரத்குமார்

    ராணுவ வீரர்களின் தியாகம்… விலையில்லாச் சொத்து! முப்படைத் தளபதி பதக்க வீரர்களுக்கு தமிழக முழுவதும் கட்டணமில்லா பேருந்து பயணம் வழங்கக் கோரிக்கை. திருச்சி: நாட்டின் எல்லையில் விழித்திருந்து தாய்நாட்டைக் காக்கும் முப்படை வீரர்களின் தியாகத்திற்கு மரியாதை செலுத்தும் வகையில், முப்படைத் தளபதிகளின்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *