தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செல்ல, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்.

தமிழகக் காவல்துறை நவீன மயமாக்கல் திட்டத்தின்படியும், தமிழக அரசின் உத்தரவின்படியும், தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் ரோந்து செல்ல, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைக்காக 10 இருசக்கர வாகனங்கள் திருச்சி மாநகர காவல் துறைக்கு வழங்கப்பட்டது.

இந்த வாகனங்களை திருச்சி மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து, மாநகர காவல் ஆணையர் ந.காமினி இருசக்கர ரோந்து வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியின் போது திருச்சி மாநகர காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு காவல் உதவி ஆணையர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்

மேற்கண்ட இருசக்கர வாகனங்கள் மத்திய பேருந்து நிலையம், ரயில் நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், காவேரி பாலம், கொள்ளிடம் பாலம் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து சென்று குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம், குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டும், பொதுமக்களிடம் இருந்து வரும் அவசர அழைப்பு எண் 100-ல் பெறப்படும் புகார்களுக்கு, உரிய நேரத்தில் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று சட்டரீதியான துரித நடவடிக்கை மேற்கொள்ளவும், திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாக்க இந்த 10 இருசக்கர வாகனங்கள் பயன்படுத்தப்படவிருப்பதாக மாநகர காவல் ஆணையர் ந.காமினி தெரிவித்தார்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை மனு அளித்த துரை வைகோ எம்.பி

    மாண்புமிகு தேசிய நெடுஞ்சாலை மற்றும் போக்குவரத்து துறை ஒன்றிய இணை அமைச்சர் திரு. ஹர்ஸ் மல்ஹோத்ரா அவர்களை அவரது அலுவலகத்தில் இன்று (03.06.2026) சந்தித்தேன். அப்போது எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மூன்று முக்கிய கேரிக்கைகளுக்கான கடிதம் வழங்கி, அதற்கான…

    எதற்காக போர் வீரர்களை தயார் செய்தோமோ…எதற்காக வீரர்களை போர்க்களத்திற்கு அழைத்து சென்றோமோ..எதற்காக போரிட்டோமோ…அதற்கான காரணத்தை, போரை வழிநடத்துபவர்கள் மறுத்து/மறந்து போனால்… -அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்

    அன்பார்ந்த கழக நிர்வாகிகளுக்கும், நலம் விரும்பிகளுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் என் மனமார்ந்த வணக்கங்கள். என்னுடைய பெற்றோர் எனக்கு அளித்த வரமாக நான் பெருமிதம் கொள்ளும் நிமிர் நெஞ்சமும், நேர்கொண்ட பார்வையுமாக, மனசாட்சிக்கு எள்ளளவும் பயப்படாமல், எனது கடமையை இது நாள் வரை சமரசம்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *