திருச்சி தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகில் ஒருவருக்கு கத்திக்குத்து. வாலிபர் கைது.

திருச்சி தென்னூர் பழைய அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சங்கர் (வயது37). இவர் நேற்று முன்தினம் தென்னூர் ஆட்டோ ஸ்டாண்ட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தோகைமலையை சேர்ந்த அப்பு என்கிற இளமாறன் (வயது 39) என்பவர் தகாத வார்த்தைகளால் சங்கரை திட்டி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுததாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த சங்கர் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுக்குறித்த புகாரின் பேரில் தில்லைநகர் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து அப்புவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதி தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

    திருச்சி கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திரா கணேசன் கல்லூரி தாளாளர் ராஜசேகரன் தற்போது திருச்சி மாவட்ட ரெட்கிராஸ் அமைப்பின் தலைவர். இந்த அமைப்பு திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரும்-திருச்சி மாவட்ட தேர்தல் பொறுப்பாளருமான மாவட்ட கலெக்டர் தலைமையில் இயங்கும் அரசு…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *