
பெரியசாமி – சிறப்பு செய்தியாளர்
திருச்சி திருவெறும்பூர் மார்ச் 31
திருச்சி திருவெறும்பூர் அருகே ஜெய் நகரில் உள்ள ஜெய் சாய் பாபா திருக்கோவிலில் 13 ஆம் ஆண்டு விழா இன்று காலை முதல் ருத்ர ஹோமம் மற்றும் சிறப்பு ஹோமங்கள் நடைபெற்று அதில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி விழாவில் கலந்து கொண்டார்.

சிறப்பு அபிஷேக ஆராத்தி நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சாய்பாபாவுக்கு சிறப்பு ஆராத்தி அபிஷேகங்கள் நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

மேலும் இந்த விழாவில் திமுக உள்ள முக்கிய கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சுவாமி தரிசனம் செய்தனர்


