குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

மண்ணச்சநல்லூர் ஒன்றியம் எதுமலை தெற்கு எதுமலை கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள். இது குறித்து பல அதிகாரிகளிடம் பேசியும் எந்த நடவடிக்கையும் இல்லாத காரணத்தினால் இன்று காலை திடீர் சாலை மறியல் ஈடுபட்டனர்.

இதனால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. தகவல் அறிந்த சிறுகனூர் காவல் நிலைய காவலர்கள் வந்து பொதுமக்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய அதிகாரிகளிடம் பேசுகிறோம் கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தியதன் பேரில் கலைந்து சென்றனர்.

இன்று மாலைக்குள் குடிநீர் விநியோகம் நடைபெறாவிட்டால் பொதுவான இடத்திலே அனைத்து பேருந்துகளையும் மறிப்போம் என்று பொதுமக்கள் முடிவு எடுத்து கலைந்து சென்றனர்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    திமுக டோக்கன் விவகாரம் – பெண் தற்கொலை – பரஞ்சோதி கண்டனம்

    மண்ணச்சநல்லூரில் திமுக வேட்பாளர் கதிரவன் வழங்கிய பரிசு பொருட்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் பிச்சாண்டார்கோவில் பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்,…

    திருச்சி கிழக்கு தொகுதிஅதிமுக வேட்பாளர் கல்வி நிறுவனத்தில் ஐடி ரெய்டு

    திருச்சி கிழக்கு தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ராஜசேகருக்கு சொந்தமான கல்வி நிறு​வனத்​தில் வரு​மான வரித்துறை​யினர் சோதனை நடத்​தினர். திருச்​சி-மதுரை தேசிய நெடுஞ்​சாலை​யில் மணி​கண்​டம் அருகே திருச்சி கிழக்கு தொகு​தி​யில் போட்​டி​யிடும் அதி​முக வேட்​பாளர் ராஜசேகரன் நடத்தி வரும் இந்திரா கணேசன்…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *