நாடு முழுவதும் வீடுகள் தோறும் மத்திய அரசு கழிப்பிட வசதி உருவாக்கியும் இங்கு சகோதரிகளுக்கு கழிப்பிட வசதி இல்லை

நாடு 77வது குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடி வருகிறது. ஆனால் இங்கு எங்களது சகோதரிகளுக்கு கழிப்பிட வசதி இல்லை டாய்லெட் போவதற்கு அக்கம் பக்கத்து வீட்டினரை அணுக வேண்டிய அவல நிலையில் உள்ள பெண் அதிகாரிகள்.

தற்காலிக தீர்வாக கழிப்பிட வசதியுடன் கூடிய வீட்டை வாடகைக்கு எடுத்து தர வேண்டும். அல்லது அருகில் உள்ள அரசாங்க அலுவலகத்தில் கழிப்பிட வசதியுடன் கூடிய அலுவலகம் வழங்க வேண்டும்.

🔥🔥 🔥 வருவாய்த்துறை அதிகாரிகள் என்பவர்கள் சீருடை அல்லாத ராணுவ வீரர்களை போல காவல்துறையினரை போல 24மணி நேரமும் அவர்கள் பணியில் இருக்க வேண்டும் அவர்கள் இல்லாமல் அரசாங்கத்தில் எந்த ஒரு வேலையும் நடக்காது.

வெள்ளம் வந்தாலும் , பேரிடர் விபத்துக்கள் நடந்தாலும் சரி, முதலமைச்சர் வந்தாலும் சரி, இலவச திட்டங்கள் வழங்கினாலும் சரி வருவாய் துறை அதிகாரிகள் இருக்க வேண்டும். கொச்சையாக சொன்னால் ஊரில் எழவு விழுந்தாலும் சரி புள்ள பொறந்தாலும் சரி வருவாய்த்துறை அதிகாரிகள் இருக்க வேண்டும். தற்பொழுது பாருங்கள் வாக்காளர் திருத்த பணி நடந்து வருகிறது, பாவம் அவர்கள் 24 மணி நேரமும் பம்பரமாக சுழன்று வேலை செய்து வருகிறார்கள் . வருவாய்த்துறை அதிகாரிகள், நமது சகோதரிகள், அவர்களுக்கு கழிப்பிட வசதி கிடையாது.

இன்று பெண்கள் சிறப்பாக பணி செய்யாத துறைகளே கிடையாது. அது சண்டை போடும் விமானமாக இருக்கட்டும், விண்வெளிக்கு செல்வதாக இருக்கட்டும் எல்லா துறைகளிலும் கொடிகட்டி பறக்கிறார்கள் நமது சகோதரிகள், பெருமிதமாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நமது சகோதரிகள் பல இடங்களில் ஆண்களை விட மிகவும் நன்றாகவே பணி செய்கிறார்கள் இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் சில இடங்களில் அவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர நாம் மறந்து விடுகிறோம் என்பது போல் உள்ளது.

இந்தியன் நிலவிற்கு சென்று வருகிறான். ஆனால் திருப்பராய்த்துறையிலும் அந்தநல்லூரிலும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு கழிப்பிட வசதியுடன் கூடிய அலுவலகங்கள் இல்லை. இதனால் பணிபுரியும் எங்களது சகோதரிகள் மிகுந்த இடைஞ்சலுக்கு உள்ளாகிறார்கள்.

நாம் நிலவிற்கு சென்று என்ன பயன்? நம்மால் ஒரு அடிப்படை வசதியான கழிப்பிட வசதி கூட செய்து தர முடியவில்லை கூட அதிகாரிகளுக்கு செய்து கொடுக்க முடியவில்லை. நாடு 77வது குடியரசு தினத்தை பெருமையுடன் கொண்டாடி வருகிறது ஆனால் இங்கு எங்களது சகோதரிகளுக்கு கழிப்பிட வசதி இல்லை.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் திருப்பராய்த்துறை வருவாய் அதிகாரிக்கு, கிராம நிர்வாக அலுவலருக்கு திருப்பராய்த்துறை ஊராட்சி அலுவலகத்திற்கு சொந்த கட்டிடம் கிடையாது, கழிப்பிட வசதி கிடையாது. இயற்கை உபாதைக்கு அவசரத்திற்கு என்ன செய்வது? அக்கம் பக்கத்து வீட்டினரை அணுக வேண்டிய அவல நிலையில் உள்ள பெண் அதிகாரிகள்.

எங்களது தாழ்மையான கோரிக்கை என்னவென்றால், உடனடி தற்காலிக தீர்வாக உயர் அதிகாரிகள்

  1. கழிப்பிட வசதியுடன் கூடிய வீட்டை வாடகைக்கு எடுத்து தர வேண்டும் அல்லது திருப்பராய்த்துறையில் உள்ள ராமகிருஷ்ண தபோவனம் கழிப்பிட வசதியுடன் கூடிய ஒரு வீட்டை தற்காலிகமாக திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அலுவலருக்கு வழங்கலாம்.

அல்லது

  1. அருகில் உள்ள அரசாங்க அலுவலகத்தில் கழிப்பிட வசதியுடன் கூடிய அலுவலகம் வழங்க வேண்டும். உதாரணமாக அந்தநல்லூர் வருவாய் அதிகாரிகளுக்கு அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இரண்டு மூன்று அறைகள் வழங்க வேண்டும். மேலும் நிரந்தர தீர்வாக,
  2. கழிப்பிட வசதியுடன் கூடிய வருவாய் அலுவலர் அலுவலகம் – அந்தநல்லூர்
  3. கழிப்பிட வசதியுடன் கூடிய திருப்பராய்த்துறை கிராம நிர்வாக அதிகாரி அலுவலகம்
  4. கழிப்பிட வசதியுடன் கூடிய திருப்பராய்த்துறை ஊராட்சி ஒன்றிய அலுவலக
    சொந்த கட்டிடம் கட்ட வேண்டும்.
  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *