துரை வைகோ முன்னெடுப்பால்திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal

திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட, திருச்சி மாநகரம், திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில், திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய நுழைவுச் சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பை உறுதி செய்ய Traffic Signal அமைக்க வேண்டும் என்ற துரை வைகோMP முன்வைத்த தொடர்ச்சியான கோரிக்கையை ஏற்று, அதற்கான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொண்டதற்காக திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

இந்த சாலை சந்திப்பில் (Road Junction) அதிக வாகன போக்குவரத்து நிலவி வரும் நிலையில் விபத்துகளை தவிர்க்க, 10.10.2025 அன்று நடைபெற்ற Airport Advisory Committee கூட்டத்தில் Airports Authority of India (AAI) இந்த கோரிக்கையை துரை வைகோவிடம் வலியுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து, 12.10.2025 அன்று எழுத்துப் பூர்வமாகவும், 13.10.2025 அன்று நடைபெற்ற DISHA மற்றும் Road Safety Meeting-களிலும் இந்த பிரச்சினையை முன்வைத்து, உடனடி தீர்வு அவசியம் என்பதை வலியுறுத்தினார் துரை வைகோ MP.

அதனைத் தொடர்ந்து, 17.01.2026 அன்று திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களுக்கு அளித்த சமீபத்திய அதிகாரப்பூர்வ கோரிக்கையின் அடிப்படையில், இந்த இடத்தில் Traffic Signal அமைக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக கூறினார் துரை வைகோ.

விமான நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து வாகனங்கள் பாதுகாப்பாகவும், ஒழுங்காகவும் பயணம் செய்ய இந்த Traffic Signal பெரிதும் உதவும். விபத்துகளைத் தவிர்க்கவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் எடுத்த இந்த நடவடிக்கை, மக்கள் நலன் சார்ந்த முக்கியமான முன்னேற்றமாகும்.

மக்கள் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு, துறைகள் ஒருங்கிணைந்து விரைவான நடவடிக்கை எடுத்த திருச்சி மாநகர காவல் துறையினருக்கும், சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் தனது நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொண்டார் துரை வைகோ MP..

NTTadmin

ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

Related Posts

வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *