காணாமல் போன 60 ஏக்கர் காடுகள்300 கோடி ரூபாய் அரசாங்க நிலத்தை மீட்க கோரிக்கை – பாதுகாக்கப்பட வேண்டிய, 60ஏக்கர் கன்சர்வன்சி பாரஸ்ட் அழிக்கப்பட்டுள்ளது

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம், அந்தநல்லூர் வருவாய் கிராமத்தில் சர்வே எண் 186ல், 60 ஏக்கர் காடுகள் காணாமல் போய்விட்டது . இந்த இடம், திருச்சி-கரூர் மெயின் ரோட்டில் எலமனூர் கிராமத்திற்கு எதிரே உள்ள ஆற்றுப்படுகையாகும்.

சாதாரணமாக இன்றைய தேதியில் எலமனூரில், திருச்சி-கரூர் ரோட்டில் முக்கியமான இடங்களில் ஒரு சென்டின் குறைந்தபட்ச விலை கிட்டத்தட்ட 5லட்சம் ரூபாய். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 6,000 சென்டின் இன்றைய மார்க்கெட் விலை கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்.

இன்றைய தேதியில் அந்த இடம் ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் இருக்கிறது. யாரோ சில புண்ணியவான்கள் அரசாங்க ரெக்கார்டையே மாற்றி விட்டார்கள். இது எங்கனம் சாத்தியமாயிற்று?

அங்கு காடுகள் இல்லை. பள்ளி, விளையாட்டு மைதானம், விளைநிலங்கள் உள்ளன. ஆனால் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 1927 ஆம் ஆண்டின் அ பதிவேடு எடுத்துப் பார்த்தால் அது பாதுகாக்கப்பட வேண்டிய காடுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு வண்டி பாதை, வாய்க்கால்கள், கிணறு, லயன் கரை போன்றவைகளும் உள்ளன.

பாதுகாக்கப்பட வேண்டிய 60ஏக்கர் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. சுற்றுச்சூழலை பாதுகாக்க,அந்த இடத்தை மீட்டு காடுகள் அமைக்க வேண்டும் அல்லது பொதுமக்களின் பொது பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.

செவிசாய்க்குமா? அரசாங்க இயந்திரம் அல்லது அதிகாரத்தின் முன்னே, பணத்தின் முன்னே மண்டியிட்டு விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • NTTadmin

    ஜனநாயகத்தின் நான்காம் தூணான ஊடக தர்மத்தை கடைபிடித்து உண்மை நிகழ்வுகளை எந்தவித விருப்பு வெறுப்பும் இன்றி எவருக்கும் எதற்கும் சமரசமின்றி மக்கள் மன்றத்தில் ஒலி(ளி)ப்பதுவே எம் கடமை.

    Related Posts

    வெற்றி! வெற்றி! திருப்பராய்த்துறை மக்கள் தொடர்பு முகாம் வெற்றி!அதிரடி அமைச்சர் ரமேஷ் – அள்ளிக் கொடுத்த நலத்திட்டம்!வாரிக் கொடுத்த வள்ளல்கள் – வழிகாட்டும் அதிகாரிகள் – திருப்பராய்த்துறையில் நலத்திட்ட அள்ளல்!பட்டா முதல் ஆண்ட்ராய்டு மொபைல் வரை 164 பேருக்கு ரூ.73.56 லட்சம் உதவிகள்

    திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் திருவிழா போல் களைகட்டியது. ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில் 164 பயனாளிகளுக்கு ரூ.73 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட…

    84 ஆண்டுகால மர்மக் கோட்டை நொறுங்கியது! தபோவனத்தில் புகுந்த BDO அண்ணாதுரை… அநீதிக்கு முடிவு கட்டிய கிருஷ்ண அவதாரம்! வரி ஏய்ப்பு சாம்ராஜ்யத்திற்குப் பூட்டு… தமிழகத்தை அலறவிட்ட BDO-வின் தர்ம யுத்தம்!

    மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்து சிம்மாசனத்தில் அமர்ந்து கொண்டு, “ஊசி முனை நிலத்தைக் கூட பாண்டவர்களுக்குத் தர மாட்டேன்!” என்று துரியோதனன் பிடிவாதம் பிடித்தானே… அதே போன்ற ஒரு சாம்ராஜ்ய ஆணவமும், 84 ஆண்டு கால அநீதியும் திருச்சிராப்பள்ளி மண்ணில் சுக்குநூறாக உடைந்து நொறுங்கியிருக்கிறது!…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *